அடுத்துவரும் ஓரிரு மாதங்களில் தேர்தல் ஒன்று நடைபெரும்

அடுத்துவரும் ஓரிரு மாதங்களில் தேர்தல் ஒன்று நடைபெறவுள்ளதாகவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கு கிராமங்களுக்குச் சென்று கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கட்சியின் சகல அமைச்சர்களுக்கும், மாகாண சபை, உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கும், அமைப்பாளர்களுக்கும் இந்த வேண்டுகோளை ஜனாதிபதி விடுத்துள்ளார்.

மாகாண சபை அல்லது உள்ளுராட்சி சபை ஆகிய தேர்தல்களில் ஒன்று இவ்வருட இறுதிக்குள் நடைபெறவுள்ளதாகவும் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க கூறியுள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைப்பாளர்கள் தமது இலக்குகளை அடைந்துகொள்ள தவறும் பட்சத்தில் புதிய அமைப்பாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -