இராஜங்க அமைச்சருடன் திகாமடுல்ல இளைஞர் பராளுமன்ற உறுப்பினர் சந்திப்பு

ஜி.முஹம்மட் றின்ஸாத் -

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாறை மாவட்டத்தில் UNICEF நிதி ஒதுக்கீட்டின் கிழ் நிர்மாணிக்கப்பட்ட திகாமடுல்ல இளைஞர் நிலையம் திறப்பு விழா (14.06.2017) தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் டீ.எம் சிசிற குமார தலைமயில் இடம் பெற்றது. இதில் தேசிய கௌ்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சர் நிரோஷன் பெரேரா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கெண்டார்.


மேலும் UNICEF நிறுவனத்தின் பிரதிநிதி பேராசிரியர் பவுலா புலன்சியா மற்றும் தேசிய கௌ்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சரின் செயலாளர், சிறு கைத்தொழில் அமைச்சர் தயாகமகே அவர்களின் செயலாளர், மாவட்ட அரசாங்க அதிபர், அரச நிறுவன தலைவர்கள், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள், இளைஞர் சேவை அதிகாரிகள், மற்றும் இளைஞர்கள் என பலரும் கலந்நு கெண்டனர்.


இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இராஜங்க அமைச்சர் அவர்களுக்கும் இடயிலான விஷேட சந்திப்பும் அங்கு இடம்பெற்றது அந்த சந்திப்பில் திகாமடுல்ல இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸமான் முஹம்மட் ஸாஜீத் பேசிய போது


தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சாய்தமருதில் சொந்த கட்டத்தில் இருக்கின்ற இளைஞர் பயிற்சி நிலையம் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின கிழக்கு மாகாண காரியாலயம் என்பன இயங்கி கொண்டு இருந்தது. திடீர் என்று அம்பாறைக்கு கிழக்கு மாகாண காரியாலயம் மாற்றப்பட்டது. இதற்கான காரணத்தை கூற வேண்டும் என்று இராஜங்க அமைச்சருடன் விவாதித்தார் அதனோடு கௌவர விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்கள் இது விடயமாக பராளுமன்றத்தில் உரையற்றினார் அது மட்டுமல்லாமலாது கைத்தொழில் மற்றும் வணிக கௌவர அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்கள் நேரடியாக பிரதமர் ரணில் விக்கரமசிங்க அவர்களிடத்தில் கொண்டு சென்றார்கள்.


இதையடுத்து பிரதமர் காரியாலயத்திலிருந்து 06.06.2017 திகதி தேசிய கௌ்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சுக்கு குறித்த காரியத்தினை அம்பாறைக்கு மாற்றம் செய்வதனை நிறுத்துமாறு வேண்டுகோள் இடப்பட்டது. இதனையும் கருத்தில் கௌ்ளாது தெடர்ந்து வாடகை கட்டத்தில் இருப்பதக்கான காரணத்தையும் இராஜங்க அமைச்சரிடம் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸமான் முஹம்மட் ஸாஜீத் கேட்டார்.


இதற்கு இராஜங்க அமைச்சர் பதில் கூறுகையில்


இது தெடர்பான அறிவித்தல் எனக்கு கிடைக்கவில்லை குறித்த அமைச்சின் பிரதி அமைச்சரிடம் இந்த கடிதம் பெறப்பட்டுள்ளது என்று கூறினார்.


உடனே இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் குறித்த கடிதத்தின் பிரதியினை இராஜங்க அமைச்சரிடம் கொடுத்தர். பின்னர் இராஜங்க அமைச்சர் அவர்கள் இதனை உடனடியாக பிரதமருக்கு கூறுகின்றேன் என்று பதில் அளித்தார்.


மேலும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் இராஜங்க அமைச்சரிடம் கூறுகையில்


இனவாத்தை வேண்டும் என்று குறித்த உயர் அதிகாரிகள் துண்டுகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளில் இளைஞர்களுக்கும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நற் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் செயற்படாகவே காணப்படுகின்றது. என்று திகாமடுல்ல இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸமான் முஹம்மட் ஸாஜீத் இராஜங்க அமைச்சரிடத்தல் கூறினார்.


(குறித்த கடிதத்தின் பிரதி இதில் இணைக்கப்பட்டுள்ளது)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -