முதலமைச்சரின் வீட்டில் காத்திருக்கும் பேரறிவாளனின் தாயார்

பேரறிவாளனின் பரோல் விடயம் குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் பேசுவதற்காக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் சென்னையில் அமைந்துள்ள முதலமைச்சர் வீட்டில் காத்துக்கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் இன்று நடைபெறவிருப்பதால், முதல்வரை சந்திக்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ள போதிலும் முதல்வரை சந்தித்து பரோல் தொடர்பான கோரிக்கையை முன்வைப்பதற்காக அற்புதம்மாள் காத்துக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளனுக்கு, பரோல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எதிர்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து வலியுறுத்தப்படுகின்றது. எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேரறிவாளனின் பரோல் குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.

உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள பெற்றோரை கவனித்துக் கொள்வதற்காக 30 நாள்கள் பரோல் வழங்கும்படி பேரறிவாளன் சார்பில் மனு தாக்கல் செய்திருந்த போதிலும் சிறைத்துறை நிர்வாகம் அதனை நிராகரித்துள்ளது. அத்துடன், தமிழக அரசும் மறுப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -