இவ்வாண்டு இறுதிக்குள் உள்ளூராட்சித் தேர்தல்

ள்ளூராட்சித் தேர்தல் சட்டம் சம்பந்தமான தொழில்நுட்பப் பிரச்சினைகள், ஜூலை மாதத்துக்குள் தீர்க்கப்படுமாயின், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை, இவ்வாண்டு இறுதிக்கும் நடத்தக்கூடிய வாய்ப்பு ஏற்படும் என, தேர்தல்கள் ஆணைக்குழு நேற்றுத் தெரிவித்தது.

நேற்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கு முன்னர், மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் உள்ளன என்றும் தெரிவித்தார்.

"கிழக்கு, வட மத்திய, சப்ரகமுவ மாகாண சபைகளின் தேர்தல்கள், 2012 டிசெம்பரில் நடத்தப்பட்டன. ஆகவே, அச்சபைகளின் காலம், இவ்வாண்டு செப்டெம்பர், ஒக்டோபரில் நிறைவடையவுள்ளன. அந்தக் காலம் நிறைவடைந்து 7 நாட்களுக்குள், தேர்தல் பற்றிய அறிவிப்பை, தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட வேண்டும்.ஆகவே, தேர்தல்கள் தொடர்பான அறிவிப்பை, ஒக்டோபர் 2ஆம் திகதி வெளியிட வேண்டும்" என்று தெரிவித்தார்.இந்த மாகாண சபைகளுக்கான தேர்தல்கள், டிசெம்பர் 10ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

"உள்ளூராட்சி, மாகாண சபைத் தேர்தல்களுக்கான தரவுகளைச் சேகரிப்பது சம்பந்தமான சுற்றுநிரூபம், ஜூலை 1ஆம் திகதி வெளியிடப்படும். அரச ஊழியர்கள், அரச பாடசாலைகளின் ஆசிரியர்கள் ஆகியோர் பற்றிய தகவல்களைச் சேகரிப்பதற்கு, இந்தச் சுற்றுநிரூபம் வெளியிடப்படும்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -