மட்டக்களப்பு நகரில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கவன ஈர்ப்புப் போராட்டம்
ஏ.எச்.ஏ. ஹுஸைன் -

ட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் வியாழக்கிழமை 15.06.2017 மட்டக்களப்பு நகரில் கவன ஈர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தியதாக இலங்கைப் பொதுச் சுகாதாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைச் செயலாளர் அருணாசலம் ராஜ்குமார் தெரிவித்தார்.

10 அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து மட்டக்களப்பு காந்தி பூங்காவிலிருந்து ஆரம்பமான பொதுச் சுகாதார பரிசோதகர்களின் கவன ஈர்ப்பு ஊர்வலம் மட்டக்களப்பு –கொழும்பு – கல்முனை மற்றும் நகர நாற்சந்தியிலுள்ள பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திற்கு முன்னால் வந்து முடிவடைந்தது.

விஷேட தர பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் நியமனம் செய்யப்படாமை, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் நியமனம் வழங்கப்படாமை, 5 வருட சேவைக்காலம் முடிவடைந்த போதிலும் முறைப்படுத்தப்பட்ட இடமாற்றம் செய்யாமை, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் அலுவலக வாடகைக் கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்காமை, கடந்த 12 வருடங்களுக்கு மேலாக அலுவலகப் பை தரப்படாமை, பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணவை வழங்கும் நோக்கில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் பணிபுரியும்போது எழுகின்ற சட்டப் பிரச்சனைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கான பதவி உயர்வு உரிய காலத்தில் வழங்கப்படவில்லை, மட்டக்களப்பு மாநகர சபையில் கட்டிடம் அமைப்பதற்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படும்போது பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களது பரிசோதனைக்கு அனுப்பாமல் மாநகர சபை அதிகாரிகளே அவற்றை அங்கீகரிப்பது, கடமை நேரத்தில் கோல (ருnகைழசஅ) உடையில் காணப்படாத அலுவலர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறியமை ஆகிய 10 அம்சக் கோரிக்கைகள் கவன ஈர்ப்பில் வலியுறுத்தப்பட்டன.

இது விடயமாக சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளருக்கு கடந்த வருடம் அறிவிக்கப்பட்டபோது இவ்வாண்டின் ஜனவரி 31ஆம் திகதி இலங்கைப் பொதுச் சுகாதாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளை அழைத்து சுகாதாரப் பணிப்பாளர் 3 மாதத்திற்குள் தீர்வு தருவோம் என வாக்குறுதியளித்திருந்தார்.

அந்த வாக்குறுதி காற்றில் விடப்பட்டதால் எமது உரிமைகளை நிலைநாட்டும் வண்ணம் இந்த கவன ஈர்ப்புப் போராட்டம் இடம்பெறுகிறது. இதுவும் வெற்றியளிக்காவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு தயாராவோம் என ராஜ்குமார் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது மொத்தம் 75 பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கடமையாற்றுகின்றார்கள். அதேவேளை, இன்னமும் 10 வெற்றிடங்கள் கடந்த 2 வருடங்களாக நிரப்பப்படாமல் உள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -