தாக்குதல்தாரியைக் காப்பாற்றிய பள்ளிவாசல் இமாம்!

ன்று அதிகாலை 12 .20 மணி போல் லண்டன் பின்ஸ்பெரி பார்க் என்னுமிடத்தில் முஸ்லிம் நலன்புரி நிலைய பள்ளிவாசலில் இரவுத் தொழுகை முடிந்து வெளியேறிய மக்கள் மீது செவன் சிஸ்டர்ஸ் வீதியில் வைத்து வேண்டுமென்றே வேன் ஒன்றை வேகமாக ஓட்டி வந்து மோதி, ஒருவரைப் பலி கொண்டு சுமார் பத்துப் பேரைப் படுகாயங்களுக்குள்ளாக்கிய வெள்ளையினத்தைச் சேர்ந்த பயங்கரவாதியை, மிகுந்த துணிச்சலுடன் வேனுக்குள்ளிருந்து இழுத்தெடுத்த மக்கள் அவரைத் தாக்கத்தொடங்கிய போது, அவர் மேற்படி பள்ளிவாசல் இமாமினால் மிகுந்த பிரயத்தனங்களுக்கு மத்தியில் காப்பாற்றப்பட்டுள்ளார்.

''இவன் ஒரு கொலைகாரன்!'' என்றபடியே கோபமுற்ற மக்கள் அந்த நபர் மீது தாக்குதல் நிகழ்த்த ஆரம்பித்திருந்தனர். மேலும் அந்த நபரை நிலத்தோடு அழுந்திப் பிடித்து வைத்திருந்தனர். ஏற்கனவே போலீசுக்குத் தகவல் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், பொலிஸ் வருவதற்கிடையில் அந்த நபர் மீது மக்கள் மோசமான தாக்குதல்களை நிகழ்த்தக் கூடுமென்பதனால், பள்ளிவாசல் இமாம் முஹம்மது மஹ்மூத் ''குற்றவாளியைப் பொலிஸில் ஒப்படைப்பதே நல்லது. அவர் மீது யாரும் தாக்குதல் நடத்த வேண்டாம்!'' என்று மன்றாடிக் கேட்டு, அந்த நபரைக் காப்பாற்றி, பொலிஸார் வந்ததும் அவரைப் போலீசாரிடம் ஒப்படைத்தார்.

இமாமின் இந்த நடவடிக்கை தற்போது இங்கே பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -