கொழும்பு நகரில் ஆர்ப்பாட்டங்களை நடத்த இரண்டு அல்லது மூன்று இடங்களை பெயரிட வேண்டும் என்ற யோசனையை அமைச்சர் மகிந்த அமரவீர அடுத்த வாரம் அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்க திட்டமிட்டுள்ளார்.
கொழும்பு நகரில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்துவதன் காரணமாக ஏற்படும் போக்குவரத்து தடை மற்றும் இயல்பு வாழ்க்கைக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இந்த யோசனை நிறைவேற்றப்பட் பின்னர், ஆர்ப்பாட்டங்களை நடத்த ஒதுக்கப்பட்டுள்ள இடங்களை தவிர வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் அல்லது பேரணிகளை நடத்தினால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிட்டப்பட்டுள்ளது.
