கூட்டு எதிர்க்கட்சி - தமிழ்ப்பிரிவு
அண்மையில் அமைச்சர் ஹக்கீம் கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது முஸ்லிம்கள் மீதுஇப்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் தாக்குதல் எங்கிருந்து வருகின்றன என்று எமக்கு தெரியும் என்றுகூறியிருந்ததோடு அவை வெளியில் சொல்ல முடியாத அளவு பாரதூரமானவை எனவும் கூறியிருந்தார்.
அமைச்சர் ஹக்கீம் இதனை மிகச் சாதாரணமாக கூறியிருந்தாலும் இது சாதாரண விடயமல்ல.அதற்கு முன்புஇலங்கையில் இடம்பெற்ற இனவாத செயற்பாடுகளின் பின்னால் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை குற்றம்சாட்டிக்கொண்டிருந்த அமைச்சர் ஹக்கீம் இவ்வாறு கூறியிருப்பதானது அதன் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஸ இல்லை என்பதை தெளிவாக நிரூபணம் செய்கிறது.இதன் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஸ இருந்தால் அதனை முதலில் வெளிப்படுத்துபவராக அமைச்சர் ஹக்கீமே இருந்திருப்பார்.
பெரும்பான்மையின முக்கிய அமைச்சர்கள் உட்பட பல முக்கிய அரசியல் வாதிகள் ஞானசார தேரரின் பின்னால்யார் உள்ளார் என்பதில் தர்க்கித்து கொண்டிருக்கின்றனர். முஸ்லிம் சமூகம் இவைகள் தொடர்பில் எந்த விதமானமுடிவும் எடுக்க முடியாமல் நிர்க்கதியான ஒரு நிலையில் உள்ளது.
இவ்வாறான நிலையில் அமைச்சர் ஹக்கீம் அதனை அறிந்தும் மறைப்பது ஏன் என்ற விடயமே அவர் மீதானசந்தேகத்தை கிளறி விடுகிறது. இது அவர் முஸ்லிம் சமூகத்துக்கு செய்கின்ற மிகப் பெரும் துரோகமும் கூட. அந்தஉண்மைகளை வெளிப்படுத்துவதில் என்ன பாரதூரமான விளைவு ஏற்படப் போகிறதோ தெரியவில்லை. அதனைஅமைச்சர் ஹக்கீம் சற்று தெளிவு செய்தால் சிறப்பாக இருக்கும்.
அமைச்சர் ஹக்கீம் இந்த விடயங்களை மறைப்பதானால் அது அரசியல் இல்லாபங்களுக்கல்லாமல் வேறுஎதற்குமாகவும் இருக்க முடியாது. இன்றைய நிலையில் அமைச்சர் ஹக்கீமின் அரசியல் இலாபங்களைஇவ்வாட்சியாலர்களிடமிருந்தே அதிகம் பெற்றுக்கொள்ள முடியும்.அவரின் தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான உறவுஎன்ற விடயத்தையும் இவ்விடத்தில் கவனத்தில் கொள்வது பொருத்தமானதாக இருக்கும் என நம்புகிறேன். அமைச்சர்ஹக்கீமின் இக் கூற்றானது பொது பல சேனாவின் பின்னால் முன்னாள் ஜனாதிபதி இல்லை என்ற விடயத்தைநிறுவிச் செல்வதோடு இவ்வாட்சியாளர்கள் மீதான சந்தேகத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.
நோர்வே உடன் நெருக்கமான உறவுகளை பேணிவரும் இந்திய புலனாய்வு பிரிவிடன் தேர்தல் செலவுகு பணம்பெற்றவர் என குற்றம் சுமததப்படும் ஹக்கீம் பொதுபல சேனா மற்றும் முஸ்லிம் விரோத தாக்குதல் ரகசியங்களைஉடனடியாக வெளியிட வேண்டும்.