பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி பதவி விலகல்

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி ஊடகப் பேச்சாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

தனது பேஸ்புக் பதவில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பிரியந்த ஜயகொடியின் உடல் நிலை கரணமாக, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் ஆலோசனையின் படி இந்த பதவியில் இருந்து விலகியுள்ளார்.

இதனையடுத்து புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி ருவான் குணசேகரவை பொலிஸ் மா அதிபர் நியமித்துள்ளார். அத்துடன், தனது கடமையின் போது ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றிக்கூறுவதாக அவர் கூறியுள்ளார்.

எனினும் பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரியந்த ஜயக்கொடி, உத்தியோகபூர்வமாக இன்னும் தனது பதவி விலகல் கடிதத்தை கையளிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் தற்போது பதவிவிலகல் கடிதத்தை கையளித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து புதிய பேச்சாளராக ருவன் குணசேகர நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -