முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தாமலிருக்கவே மு.கா உருவாக்கப்பட்டது: அதாஉல்லா

எம்.ஜே.எம்.சஜீத்-
முஸ்லிம் இளைஞர்களை ஆயுதம் ஏந்துவதிலிருந்து பாதுகாக்கவே ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சி பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களினால் உருவாக்கப்பட்டதென தேசிய காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார்.

பாலமுனை ரைஸ்டார் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட மின்னொளி கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் (20) கழகத்தின் தலைவர் எம்.எச்.எம்.ஜெஸ்பர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

விளையாட்டு என்பது தலைமைத்துவப் பண்புகளை உருவாக்குகின்ற ஒரு முக்கிய கருவியாகும். இளைஞர்கள் என்பவர்கள் ஒரு சமூகத்தினுடைய நாளைய தலைவர்கள் அவர்கள் சமூகத்தினுடைய முதுகெலும்பாக திகழ்கின்றவர்கள். அந்த இளைஞர்களை நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் அவர்களுயை என்னங்கள் எந்தளவு உயர்ந்திருக்க வேண்டும் என்பது பற்றி நாம் அறிந்து வைத்திருக்கின்றோம்.

எமது சமூகத்திலுள்ள இளைஞர்களை முறையாக வழிநடத்த வேண்டிய தேவை எமக்கிருக்கிறது. குறிப்பாக கடந்த கால போர்ச் சூழலில் முஸ்லிம் இளைஞர்களும் ஆயுதம் தூக்க வேண்டும் ஆயுதம் தூக்காமல் வழியில்லை என்கின்ற ஒரு நிர்ப்பந்தம் வந்தபோதுதான் மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் யாரும் ஆயுதம் தூக்க வேண்டிய அவசியமில்லை நாம் ஒற்றுமைப்பட்டு அரசியல் ரீதியாக பலமடைந்து எமது சமூகத்திற்கு பாதுகாப்பு கொடுப்போம் என்றுதான் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசை உருவாக்கினார். ஆனால் இன்று ஒரு சிலர் இவ்வரலாற்றுக் காலத்திலே என்ன கூறுகின்றார்கள் என்றால் இளைஞர்களே அணிதிரளுங்கள் இனவாதிகளை எதிர்ப்பதற்கு ஆயத்தமாகுங்கள் என்று சிறுபிள்ளைத்தனமான நடந்து கொள்வதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

குறிப்பாக தமிழ் சகோதரர்கள் கடந்த காலங்களிலே குழுக்களாகப் பிரிந்து பல ஆண்டு பயிற்சிகளைப் பெற்று போராடி அவர்கள் இன்று யாரும் இல்லாதவாறு நிலைமைகள் இருக்கிறது. அவ்வாறான வரலாறுகளைப் பார்க்கின்ற போது ஆயுதம் தூக்குவதாலும், உணர்ச்சிவசப்பட்டு மேற்கொள்கின்ற போராட்டங்களும் எங்களை ஒருபோதும் கரை சேர்க்கமாட்டாது. இதனையே பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களும் எமக்குக் கூறியிருக்கிறார்கள் அதனையே இன்று வரலாற்று ரீதியாக கான்கின்றோம்.

இன்று சில இனவாதக் குழுக்கள் எதற்காக முஸ்லிம்களை வஞ்சிக்கின்றது. அவர்கள் அல்லாஹ்வையும், அவனது தூதர் முஹம்மது நபி அவர்களைப் பற்றியும் ஏன் அவதூறு பேசவேண்டும் இவர்கள் எதற்காகப் பேசுகின்றார்கள் இதற்கான முன்னுதாரணங்கள் என்ன கடந்தகாலத்திலே என்ன நடந்தது என்பதுபற்றி ஆராயக்கூடிய புத்திசாலித்தனமான இளைஞர்களாக நாம் இருந்தாக வேண்டும். ஆனால் அரசியலுக்காக வீராப்புப் பேசி இளைஞர்களை உணர்வூட்ட வேண்டிய தேவை எமக்கு ஒரு போதும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -