தனது மகள் படிப்புக்காக இரவில் ஆட்டோ ஓட்டும் -பொலிஸ் உத்தியோகத்தர்

ஹைதராபாத்தில் போக்குவரத்து காவலராக பணிபுரியும் ஜாவீத் கான், தனது மகள் படிப்புக்காக இரவில் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றுகிறார்.

ஹைதராபாத்தில் போக்குவரத்து காவலராக பணியாற்றுகிறார் ஜாவீத் கான். இவருக்கு 5 குழந்தைகள் உள்ளனர், அதில் நான்கு பெண் குழந்தைகள். இவர்களின் கல்வி செலவுக்காகவே பகலில் காவலர் பணிகளை முடித்துக் கொண்டு, இரவில் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றுகிறார் ஜாவீத் கான். இவரின் மூத்த மகள் ஃபாத்திமா தற்போது பி.பி.ஏ படித்து வருகிறார். இவர் சி.ஏ தேர்வுகளுக்கும் தயாராகி வருகிறார். அதற்கான பயிற்சி வகுப்புகளின் கட்டணத்துக்காகவும், பள்ளிகளில் படிக்கும் மற்ற குழந்தைகளுக்காகவும் தான் ஜாவீத் கான் மாடாய் உழைக்கிறார்.

6000 சம்பளத்துக்கு காவல்துறையில் சேர்ந்த ஜாவீத் கானுக்கு தற்போது 12000 சம்பளம். இரவில் ஆட்டோ ஓட்டுவதன் மூலம் கூடுதலாக தினமும் ரூபாய் 300 கிடைக்கிறதாம். மேலும், இவரது மனைவியும் சேலைகளில் எம்பராய்டரி வேலைகள் செய்து வருவாய் ஈட்டுகிறார். இந்த பணத்தை வைத்து தன் பிள்ளைகளுக்கு தரமான கல்வியை கொடுக்க முயல்கிறார் ஜாவீத் கான். இது குறித்து ஜாவீத் கான் கூறுகையில், 'பெண் குழந்தைக்கு கல்வியை வழங்குவதை விட வேறு சிறப்பான ஒன்று எதுவுமில்லை', என சுருக்கமாக முடித்துக்கொண்டு பணிக்கு கிளம்பிவிடுகிறார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -