நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை மாணிக்கமடுவில் சிலைவைக்கப்பட்டுள்ள பிரதேசத்தை அண்டிய பகுதிகளுக்கு செல்லவதால் இனமுறுகள் ஏற்படலாம் என பொலிஸ் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ள நிலையில் அப்பிரதேசத்துக்கு எவரும் செல்லக்கூடாது என உத்தரவிட்டுள்ள நிலையில் நேற்று மாலை பௌத்த தேரர்கள் குழு ஒன்று அவ்விடத்துக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளது.
நேற்று மாலை மாணிக்கமடு பிரதேசத்திற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில் கிழக்கு பொலிஸாரின் அனுமதியுடன் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் தலைமையில் தேரர்கள் குழு மாணிக்கமடு மாயக்கல்லிக்குச் சென்று அங்கு பூஜைகளை நடத்தியுள்ளது.
பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் இந்த வெசாக் கொண்டாட்டங்களை தடுப்பதற்காக பொலிஸார் குவிக்கப்பட்டிருந்த போதிலும் இறக்காமத்தை சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவருடைய அனுமதியின் பெயரில் இந்த வெசாக் கொண்டாட்டங்கள் இடம்பெறுவதற்காக வழிவகிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
எது எவ்வாறு இருந்தாலும் நீதிமன்ற உத்தரவு இங்கு எந்தவிதமான மத வழிபாடுகளையும் செய்யக் கூடாது என்பதுதான். ஆனாலும் இன்று முக்கியஸ்தர் ஒருவருடைய உத்தரவின் பெயரிலே வெசாக் வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.



