எம்.எம்.ஜபீர்-
வரிப்பத்தான்சேனை சபா மகளிர் அமைப்புக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகுதி கதிரைகள் கையளிக்கும் நிகழ்வு முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் என்.எம்.ஆஷிக் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கதிரைகளை மகளிர் சங்க பிரதிநிகளிடம் கையளித்தார். இதில் இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் உள்ளிட்ட அமைப்பின் அங்கத்தவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.