100 ரூபா தாங்களேன்!..- அரசியல் கிசுகிசு

மீத்தொட்டமுல்ல குப்பை மேடு அனர்த்தம் ஏற்படுவதற்குக் காரணம் அரசியல்வாதிகளின் ஊழல், மோசடிதான் என்பதில் சந்தேகமில்லை. மக்கள் வாழ்கின்ற இடத்தைத் தேடிப் போய் குவிக்கப்பட்ட குப்பைகள் அவை என்பதால் அந்தக் குப்பை மேடு சரிந்து வீழ்ந்ததை இயற்கை அனர்த்தமாக எற்க முடியாது என்பதே மக்களின் நிலைப்பாடாகும். உண்மையும் அதுதான்.

இதனால் அந்தப் பகுதி மக்கள் அரசியல்வாதிகள்மீது கடுப்பாகவே உள்ளனர். மஹிந்த ஆட்சியில் அந்தக் குப்பைகள் கொட்டப்பட்டதால் மஹிந்த அணி எம்பிக்கள் அந்த மக்களைப் பார்க்கச் செல்லும்போதெல்லாம் மக்கள் அவர்கள்மீது பாயவே செய்தனர். அப்படித்தான் பாவம் உதய கம்மன்பிலவும் அவர்களிடம் சிக்கினார்.

அந்த மக்களை பார்ப்பதற்காக அவர் அண்மையில் அங்கு சென்றார். அவரைச் சூழ்ந்துகொண்ட மக்கள் வெவ்வேறு கேள்விகளைத் தொடுத்தனர். சிலர் ஏசித் தள்ளினர். அவர்களுள் ஒருவர் கேட்டார் '' எண்ண எங்களுக்கு நட்டஈடு கொடுப்பதற்கு வந்தீர்களோ. அப்படியென்றால் 100 ரூபா தாங்க போதும்''.என்றார்.

இதனால் கம்மன்பில வெட்கப்பட்டு அசடு வழியத் தொடங்கினார். 100 ரூபா கேட்டதும் ஏன் அசடு வழிந்தார் என்று தெரியுமா? கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அவர் தேர்தல் செலவுக்காக இந்த நாட்டு மக்கள் ஒவ்வொருவரிடமும் 100ரூபா கேட்டிருந்தார். செலவழிப்பதற்குத் தன்னிடம் பணம் இல்லையென்று கூறி இருந்தார்.

அவரது இந்த ஸ்டைலை வைத்தே மக்கள் அவரை கிண்டல் செய்து திருப்பி அனுப்பிவிட்டனர். பாவம் ஒரு வார்த்தையும் பேசாமல் திரும்பிவிட்டார். இந்தக் கசப்பான அனுபவத்தை தனது நண்பர் ஒருவரிடம் கூறி புலம்பினாராம் கம்மன்பில.
எம்.ஐ.முபாறக் - சிரேஷ்ட ஊடகவியலாளர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -