வீட்டுக்குள் 1 கிலோ கஞ்சா ; 2 பிள்ளைகளின் தாய் கைது

க.கிஷாந்தன்-
விற்பனைக்காக வீட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளை மீட்டுள்ளதோடு, அதனை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரை 01.05.2017 அன்று மாலை ஊவாபரணகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஊவாபரணகம கட்டுகல்ல பகுதியில் வீட்டில் கஞ்சா வைத்திருப்பதாக கிடைத்த இரகசியத் தகவலின்படி சந்தேகநபரான 39 வயதான இரண்டு பிள்ளைகளின் தாய் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த தாயின் வீட்டில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்ட பொலிஸார் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா போதைப்பொருளை மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான குறித்த தாயை வெலிமடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தயிருப்பதாகவும், கஞ்சா போதைப்பொருளும் நீதிமன்றில் கையளிக்கப்படவுள்ளதாகவும் ஊவாபரணகம பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -