நேற்றைய பதற்ற சம்பவம் : 07வீடுகளின் ஜன்னல், மோட்டார் சைக்கிளுக்கு சேதம்

நேற்று (27) பிலிமத்தலாவ, தந்துர பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையில் அங்கு மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சினால் ஏழு வீடுகளின் ஜன்னல்கள் மற்றும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் சேதமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். 

முகநூலில் முஸ்லிம் இளைஞன் ஒருவர் மேற்கொண்ட பதிவொன்றின் பின்னணியில் ஏற்பட்ட இச்சம்பவத்தின் பின்னணியில் அங்கு பொலிசார் விரைவாகச் செயற்பட்டதோடு விசேட அதிரடிப்படையினரும் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 

எனினும் அருகில் உள்ள விகாரையில் இது தொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெற்ற போதே பிறிதொரு குழு இவ்வாறு கற்களை வீசி சேதத்தை உருவாக்கியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதட்ட சூழ்நிலை தற்போது தணிந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -