ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை எதிர்வரும் மே மாதம் முதல் மீண்டும் இலங்கைக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. ஜீ.எஸ்.பி. வரிச் சலுகையை மீண்டும் இலங்கைக்கு வழங்குவது தொடர்பில் மதிப்பீடு செய்வதற்காக இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட தொழில்நுட்ப மதிப்பீட்டுக்குழுவினர், குறித்த மதிப்பிட்டு அறிக்கையினை ஐரோப்பிய ஒன்றியத்தின் விஷேட கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கவுள்ளனர்.
எதிர்வரும் புதன்கிழமை நடைபெறும் ஐரோப்பிய ஒன்றியத்தின் விஷேட கூட்டத்தின் போது மதிப்பீட்டு குழுவின் அறிக்கை சாதகமான தன்மைகளை வெளிப்படுத்தினால் மே மாதத்தில் இருந்து ஜீ.எஸ்.பி- பிளஸ் மீண்டும் இலங்கைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
மனித உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் கடந்த அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டின் காரணமாக ஜீ.எஸ்.பிளஸ் வரிச்சலுகையை இலங்கைக்கு இழக்க நேரிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.