GSP+ வரிச்சலுகை மூலம் இலங்கைக்கு வருடாந்தம் 250 பில்லியன் ரூபா இலாபம் கிடைக்கும்

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மூலம் இலங்கைக்கு வருடாந்தம் 250 பில்லியன் ரூபா இலாபம் கிடைக்கும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கக் கூடாது என முன்வைக்கப்பட்ட பிரேரணை ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் நேற்று தோற்கடிக்கப்பட்டது.இந்தப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டமையானது, இலங்கைக்கு கிடைத்த வெற்றி என நிதி அமைச்சர் கூறியுள்ளார்.

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு மீண்டும் கிடைப்பதனூடாக பொருளாதார மற்றும் வர்த்தக ரீதியாக பாரிய நன்மைகள் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கான அறிவிப்பு அடுத்த மாதமளவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -