இன்றைய முஸ்லிம் சமூகத்தில் உலமாக்களையும் ஹாபிழ்களையும்கண்ணியப்படுத்துவதை காணக் கிடைப்பது அரிதாகவே உள்ளதாக கிழக்கு மாகாணமுதலமைச்சர் ஹாபி்ஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்,
உலமாக்களுக்கு ஹாபிழ்களுக்கும் மதிப்பளிக்காத தன்மையினால் ஆன்மீக ரீதியிலும் லௌகீக ரீதியிலும் பின்னடைவுகளை சந்தித்த சமூகமாக முஸ்லிம் சமூகம் மாறும் ஒரு துர்ப்பாக்கிய நிலையினை தடுப்பதற்கு அனைவரும் முன்வர வேண்டுமென கிழக்குமுதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
கிழக்கு மாகாண ஹாபிழ்கள் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படும் ஹாபிழ்களுக்கானஅல்குர் ஆன் மனனப் போட்டி நிகழ்வின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான போட்டிகள்காத்தான்குடி ஜாமி்ய்யதுல் பலாஹ் அரபுக்கல்லூரியில் இடம்பெற்ற போது அதில் பிரதமஅதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே கிழக்கு மாகாண முதலமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்,
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர்,
பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் தமது வயதுக்கு மூத்த தேரராக இருந்தாலும் சிறுவயது தேரராக இருந்தாலும் அவர்களது மத அனுஷ்டானங்களின் பிரகாரம் அவர்கள்தேரர்களுக்கு மதிப்பளிப்பதை நாம் காண முடியும்,பஸ்களில்அ செல்கின்ற போது கூட எந்த வயது தேரர்கள் வந்த போதிலும் கூடஎழுந்து நின்று அவர்களுக்கு மரியாதை அளிப்பதுடன் அவர்களுக்கு தமது இருக்கைகளைகொடுப்பதையும் நாம் அவதானிக்க கூடியதாக இருக்கும்,இதனுடன் நாம் இன்று சமூகத்தில் உலமாக்களுக்கும் ஹாபிழ்களுக்கும் வழங்கப்படும்மரியாதையை ஒப்பிட்டுப்பார்த்தால் பூச்சியம் என்றே சொல்ல வேண்டும்,இன்று நம் சமூகத்தில் மலிந்துள்ள சீரழிவுகள் மற்றும் குற்றச் செயல்களுக்கும் இதுவும்ஒரு காரணம் என கூறலாம்,
நாம் சிறு வயதினராக இருக்கும் போதெல்லாம் உலமாக்களுக்கும் ஹாபிழ்களுக்கும்அளிக்கப்படும் கௌரவத்தையும் மரியாதையைும் நாம் கண்டிருக்கின்றோம்,
ஆகவே அவ்வாறான ஒரு நிலையை மீண்டும் சமூகத்தில் உருவாக்குவதற்கான பொறுப்பும்கடமையும் இன்றைய சமூகத் தலைவர்களுக்கு உள்ளது என்பதை நினைவுபடுத்த வேண்டும்என கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்,
கிழக்கு மாகாண ஹாபிழ்கள்கள் ஒன்றியத்தின் தலைவராக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ்நசீர் அஹமட் செயற்பட்டு வருவதுடன் அவரது முயற்சியின் பயனாக ஹாபிழ்களுக்கான குர்ஆன் மனனப் போட்டி நிகழ்வுகள் அம்பாறை,மட்டக்களப்பு மற்றும் திருகோணமலைஆகிய மாவட்டங்களை மையப்படுத்தி இ்டம்பெற்று வருகின்றன.
இதனடிப்படையில் அம்பாறை மாவட்டத்திற்கான போட்டி நிகழ்வுகள் கடந்த வாரம்நிறைவுற்றதுடன் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான போட்டிகள் நேற்றுடன் நிறைவுக்குவந்தன.
ஹாபிழ்களுக்கான குர்ஆன் மனனப் போட்டிகள் காத்தான்குடி ஜாமிய்யுல் பலாஹ்அரபுக்கல்லூரியில் இடம்பெற்றதுடன் ஹாபிழாக்களுக்கான போட்டிகள் ஜாமிய்யதுல்சித்திக்கீயா அறபுக்கல்லூரியில் இடம்பெற்றன.
இதன்போது கிழக்கு முதலமைச்சர் ஒவ்வொரு ஹாபிழ்களையும் தனித் தனியே சந்தித்துஅவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது,
இவற்றின் இறுதி நிகழ்வும் கிழக்கு மாகாண ஹாபிழ்களின் மாபெரும் மாநாடும் எதிர்வரும் மே மாதம் ஏறாவூர் அலிகார் மைதானத்தில்கோலாகலமா நடத்த ஏற்பாடுகள்முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.