ஊடகப்பிரிவு-
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் இன்று இரவு (09) திடீர் என இறக்காமம் வைத்தியசாலைக்குச் சென்று அங்குள்ள நிலமைகளை ஆராய்ந்தார். அன்மையில் இறக்காமம், வாங்காமம் பிரதேசத்தில் இடம்பெற்ற அசாதரண நிலையை தொடர்ந்து அங்குள்ள சுகாதாரசேவைகளை தொடர்ந்தும் கண்கானித்து வரும் வேலை இன்றும் குறித்த வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டு வைத்தியசாலையின் தற்போதைய நிலவரத்தை அறிந்து கொண்டதுடன் அங்கு அனுமதிக்கப்பட்ட நோயாளர்களின் நிலைகள் தொடர்பாகவும் அங்குள்ள வளங்கள் தொடர்பாகவும் ஆராய்ந்தார்.
இன்று 101 நோயாளிகள் அனுமதிக்கப்பட்ட இந்நிலையில் இறக்காமம் பிரதேசத்தின் தற்போது சுமூகமான நிலை தொடர்ந்துள்ளதாகவும். வைத்தியசாலையில் தொடர்ந்தும் வைத்தியர்களும், தாதியர்களுயர்கள் கடமைபுரிவதுடன் வாகாண வசதிகளும் தொடர்ந்தும் ஏற்பட்டுத்தப்பட்டுள்ளதை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் பார்வையிட்டதுடன் வைத்தியசாலைக்கு தொடர்ந்தும் மேற்கொள்ளவுள்ள தேவையான வளங்களையும் கேட்டறிந்து கொண்டனார்.
மேலும், அங்குள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களுடன் உரையாடி அங்குள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார். இதன் போது, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் இணைப்பாளர் ஜமீல் காரியப்பர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான முஸ்மி, ஆசிக் உள்ளிட்டர்களுடன் பலர் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.