10 வருடங்களின் பின்னர் நீர் மின் உற்பத்தி நிலையங்களுக்கு அருகில் உள்ள நீரேந்து நிலைகளின் நீர் மட்டம் 31 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை இதனை தெரிவித்துள்ளது.
கடந்த வருத்தில் குறித்த நீரேந்து பகுதிகளின் நீர்மட்டம் 75 சதவீதாக காணப்பட்டதாக மின்சார சபையின் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டார். இந்த நிலையில் மின்சார பாவனையாளர்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே, நாட்டின் பல பாகங்களில் மாலை வேளைகளில் மழை பெய்யும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.