கருமலையூற்று பள்ளி வாசல் காணிகள் விடுவிக்கப்படும்..!

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை -கருமலையூற்று பள்ளி வாசலுக்கு சொந்தமான காணிகள் மிக விரைவில் விடுவிக்கப்படவுள்ளதாக திருகோணமலை மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்.

கருமலையூற்று பள்ளி வாசல் காணிகளை விடுவிப்பது தொடர்பாக இன்று (24) பிற்பகல் 12.30 மணியளவில் கிழக்கு மாகாண ஆளுனர் தலைமையில் விஷேட சந்திப்பொன்று இடம் பெற்றது.

இச்சந்திப்பு முடிவடைந்த பின்னர் திருகோணமலை மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்;

உடனடியாக பாதுகாப்பு அமைச்சுக்கு இந்த காணி உண்மையிலேயே இரானுவ முகாமுக்கு வௌியே இருப்பதாகவும் அதே போன்று இந்த காணி எதிர்காலத்தில் இரானுவ முகாமிற்கு தேவையில்லை என்பதை உறுதிப்படுத்தி பிரதேச செயலாளர் ஊடாக காணி ஆணையாளருக்கு அனுப்பி அதனுடைய பிரதியை பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு வருகின்ற புதன்கிழமைக்கு முன்னதாக அனுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாராளமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்.

அத்துடன் இது சம்பந்தமாக விமானப்படை மற்றும் கடற்படை உத்தியோகத்தர்.மற்றும் உயரதிகாரிகளுடன் கதைத்து அக்காணிக்கு விஜயம் செய்வதற்கான ஒரு தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அப்பயணம் நாளை அல்லது நாளை மறுநாள் விஜயம் செய்யவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை எந்தவிதமான பிரச்சினையுன்றி இக்காணியை விடுவிப்பதற்குறிய நடவடிக்கையினை கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்ணான்டோ எடுத்துக்கொண்டிருக்கின்றார். இக்கலந்துறையாடலில் திருகோணமலை இரானுவ கட்டளைத்தளபதி அனுர ஜெயசேகர. திருகோணமலை மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.அருள்ராஷா.கிழக்கு மாகாண காணி ஆணையாளர் ஏ.தர்மதாஷ மற்றும் திருகோணமலை பட்டனமும் சூழலும் பிரதேச செயலாளர் ஜே.எம்.அருள்ராஜ் .கரையோர பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.பாயிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -