புதுக்குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி கண்டுபிடிப்பு..!

பாறுக் ஷிஹான்-
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு அரச காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி செய்யப்பட்ட இடம் முற்றுகையிடப்பட்டுள்ளது. நேற்றைய தினம்(6) முல்லைத்தீவு மாவட்ட சட்டவிரோத மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு பொறுப்பதிகாரி எம்.உதயானந்தன் குழுவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அங்கு சென்றனர்.

இதன் போது குறித்த காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக நடைபெற்று வந்த கசிப்பு உற்பத்தி கண்டுபிடிக்கப்பட்டதுடன் அங்கிருந்து 60 லீட்டர் கசிப்பு, ஒரு இலட்சத்து எண்பதினாயிரம்(180000) கோடா உள்ளிட்ட முக்கிய பொருட்கள் அதிகாரிகளினால் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த கசிப்பு உற்பத்தியை மேற்கொண்ட வந்தவர் என நம்பப்படும் 52 வயதுடைய புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தை சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -