சீரற்ற காலநிலையால் பிற்போடப்பட்டிருந்த கத்தாரில் வசிக்கும் கல்முனை சகோதரர்களிற்கான விசேட ஒன்றுகூடல் GFK Gala Day - 2017 எதிர்வரும் வெள்ளிக்கிழமை, 10-03-2017 காலை 08:00 மணி தொடக்கம் மாலை நான்கு மணி வரை அஷ் ஷஹனிய்யாஹ்வில் அமைந்துள்ள “டொசாரி பார்க்” இல் (Al Dosari Zoo And Game Reserve.) ஏற்பாடாகியுள்ளது. இந்நிகழ்வில் கத்தார் வாழ் கல்முனை சகோதரர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இந்நிகழ்வானது முழுநாள் நிகழ்வாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன் இந்நிகழ்வினை மெருகூட்டும் வகையில் விளையாட்டுக்கள் மற்றும் கலை கலாசார நிகழ்வுகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கத்தாரில் குடும்ப சகிதம் வசிக்கும் சகோதரர்களுக்கென விசேட ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதனால் குடும்ப சகிதம் கலந்து இந்நிகழ்வை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இவ் இன்பகரமான நிகழ்வில் கலந்துகொள்ளும் சகோதரர்கள் கீழே உள்ள தொலைபேசி இலக்கதினூடாக 55714262, 30405101மற்றும் 77221062 உங்களது வரவினை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
ஒன்று கூடி, உரையாடி, உறவாடி உறவுகளையும், நட்புக்களையிம் வளர்க்க வாஞ்சையுடன் அழைக்கின்றோம்.
ஏற்பாடு: Gulf Federation for Kalmunai – GFK