இன்று-28 அதிகாலை வெளியாகிய க.பொ.த.சா/தரம் பரீட்சையின் பெறுபேற்றின்படி
அட்டாளைச்சேனை கோணாவத்தை அந்நூர் மகாவித்தியாலய வரலாற்றுச்சாதனை படைத்துள்ளாது.
அந்-நூர் மகா வித்தியாலயம் சார்பாக கடந்த வருடம் 2016 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் 32 பேரும் சிறந்த முறையில் சித்தியடைந்துள்ளனர்.
குறித்த 32 மாணவர்களும் 100வீதம் சித்தியடைந்து உயர்தரம் கற்பதற்கான தகுதியையும் பெற்றுள்ளனர். இதில் எம்.முபாஹித் மற்றும் ஆர். பாத்திமா நஸ்கா ஆகியோர் 8A, B அடிப்படையில் பெற்று பாடசாலையில் முன்னிலை வகிக்கின்றனர்.
குறித்த மாணவர்களின் கல்விக்காக முறையுடன் செயல்பட்ட ஆசிரியர்கள், அதிபர் மற்றும் பெற்றார்கள் முயற்சியை சரியாகப் பயன் படுத்திய மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் கோணாவத்தை சமூகம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.