ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரீ. ஹசன் அலி கலந்து கொள்ளும் 2 வது மாபெரும் பொதுக் கூட்டம் நாளை ( 10.03.2017) வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் பொத்துவில் "மைலன்" பழைய தியேட்டருக்கு முன்னால் நடைபெறவுள்ளது.
பொத்துவில் பிரதேச சபை முன்னாள் உதவித் தவிசாளர் ஏ.எம்.எம். தாஜுதீன் தலைமையில் நடைபெறும் இப்பொதுக் கூட்டத்தில், மு.கா.வின் உயர் பீட உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம். அன்ஸில் (அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்னாள் தவிசாளர்), எம்.ஏ.எம். தாஹிர் (நிந்தவூர் பிரதேச சபை முன்னாள் தவிசாளர்) ஆகியோர்கள் உட்பட உயர் பீட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளார்கள்.
இக் கூட்டத்தில் மு.கா.வின் தற்போதைய நிலை பற்றிய விளக்கம் அளிக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.