இன்று நாட்டின் அபிவிருத்தியில் முன்னின்று உழைக்கும் சக்தியாக பெண்கள் முன்னேறிக் கொண்டிருக்கி;ன்றனர். அவர்களின் கடின உழைப்பில் எத்தனையோ குடும்பங்கள் வாழ்கின்றது. ஆண்களைப் போலவே பெண்களும் இன்றுவேலைத் தளங்களுக்குச் சென்று உழைத்து ஊதியம் பெறுகின்றனர். மற்றுமோர் வகையில் முறைசாறாத் தொழில்களில் அற்பணிப்புடன் ஈடுபட்டு அதில் பெருமளவு சம்பாதித்து தொழில் வளங்குனர்களாக மாறியிருப்பதையிட்டு பெண் சமுகம் பெருமை கொள்கிறது. பெண்களின் உழைப்பினில் பெருமதியிருப்பதால் அரசதரப்பினர் அவர்களுக்கு ஆதரவு கொடுக்கவேண்டும் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் சர்வதேச மகளீர் தினத்தையொட்டி மட்டக்களப்பு மாநகரமண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.ளு.கிரிதரன் பிரதம அதிதியாகவும், மாநகர ஆணையாளர் திரு.ஏ.தவராஜா சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்டனர். தலைமையுரை நிகழ்த்திய பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் மேலும் தெரிவி;க்கும் போது, எல்லா வகையான அடக்கு முறைக்கும் பாரபட்சங்களுக்கும் வீட்டில் உள்ள பெண் உள்ளாகி வருகின்ற போது, நின்று நிதானித்து சரி பிழை பற்றிச் சிந்திப்பதற்கும் பகுத்தாராய்வதற்குக் கூட நேரமின்றி இயந்திர வாழ்ககையில் எத்தனையோ குடும்பப் பெண்கள் நாளாந்தம் இயங்கிக் கொண்டிருக்கி;ன்றனர்.
பெண்கள் மீதான அடக்கு முறைக்கெதிரான மாற்றுக் கருத்துக்கள் சலியாது முன்வைக்க வேண்டிய தேவைப்பாடு அனைவருக்கும் உள்ளது. பெண்கள் பொறுமை, அடக்கம் போன்ற குணாதிசயங்களைக் கொண்டிராத சந்தர்ப்பத்தில் பெண்மை இழந்தவள் என்று இந்தச் சமூகம் முத்திரையிடுகிறது. எது எவ்வாறிருப்பினும் ஒரு பெண்ணின் ஆதரவு இன்றி எந்தத் தனி மனிதனும் முன்னேறிய வரலாறு கிடையாது என்பதை அனைவர்களும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என மேற்கண்டவாறு அஸீஸ் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது முறைசாறா தொழில்களில் ஈடுபட்டு முன்னுக்கு வந்த பெண் தலைவிகளின் அனுபவப் பகிர்வும் அத்துறைகளில் பணியாற்றும் அரச அதிகாரிகளின் கருத்துக்களும் முன்வைக்கப்பட்டது. அத்துடன் கிராமியப் பாடல்களும் கலாசார நடனமும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.