ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்
கிழக்கின் முதலமைச்சருக்காகவோ அல்லது பாராளுமன்றம் நுளைவதற்காகவோ பல் இழிக்கின்ற ஒருவனாக இந்த ஆதாவுல்லா ஒரு பொழுதும் இருந்ததும் இல்லை இருக்க போவதுமில்லை. பொதுவாக ரவூப் ஹக்கீம் யார் என்பதனை எப்பொழுது நாங்கள் புறிந்து கொண்டோமோ அதன் அடிப்படையில் எங்களுக்கு வாய்ந்தி எடுக்க ஏற்பட்டது. ஆகவே ரவூப் ஹக்கீம் விடயத்தில் நாங்கள் எடுத்த வாந்தியினை மீண்டும் உண்பதற்கு தயாரில்லை என முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவிடம் மீண்டும் நீங்கள் முஸ்லிம் காங்கிரசின் இணைந்து கொள்வதற்கான முஸ்தீபுகள் இடம் பெறுவதாக தெரிவிக்கப்படுகின்ற கருத்துக்களில் ஏதும் உண்மை இருக்கின்ற என்றே கேள்விக்கே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தனது கருத்தினை தெரிவித்த முன்னாள் அமைச்சர் அதாவுல்லா….
அவ்வாறு ரவூப் ஹக்கீமினை புரிந்து கொண்டதற்கு பிற்பாடு எங்களால் எடுக்கப்பட்ட வாந்தியோடு, அவரைப்பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய நிலை எங்களுக்கு ஏற்பட்டது. அவைகள் தனிப்பட்ட முறையில் எனக்கும் ரவூப் ஹக்கீமிற்கும் இருந்த பிரச்சனைகளால் ஏற்பட்ட முடிவுகள் கிடையாது. தனிப்பட்ட முறையில் நானும் ரவூப் ஹக்கீமும் நல்ல நண்பர்கள். எனக்கு பின்னர் அவர் கட்சியில் சேர்ந்தாலும் இஹ்லாசான முறையில் நான் கூறிகொள்வதெல்லாம் தனிப்பட்ட முறையில் எனக்கும் ரவூப் ஹக்கீமிற்கும் எந்த பிரச்சனைகளும் கிடையாது என்பதே.
சமூகம் சார்ந்த பிரச்சனைகளில்தான் எனக்கும் அவருக்கும் பிரச்சனைகளும், முரண்பாட்டு அரசியலும் இருந்தது. அந்த வகையிலே சமூகம் சார்ந்த விடயங்களில் ஏற்கனவே அவர் வெவ்வேறு சதி வலைகளுக்குள் ஏதோ ஒரு அடிப்படையில் மாட்டிக்கொண்டார். அதே போன்று வெவ்வேறு வெளி நாடுகளின் சக்திகளின் சதி வலைகளுக்குள்ளும் மாட்டிக்கொண்டு அவரால் எந்த விதமான முடிவுகளையும் எடுக்க முடியாமல் மற்றவர்களின் முடிவுகளுக்கு அடிபணிகின்ற பொம்மையாக மாறியிருப்பதனை நன்கு தெரிந்து கொண்டவனாக இருகின்ற இந்த சூழ் நிலையில் ஹக்கீமோடு சேர்ந்து செயற்படும் விடயத்தில் எடுத்த வாந்தியினை உண்கின்றவர்களாகவே நாங்கள் சமூகத்தால் பார்க்கப்படுவோம். ஆகவே அந்த தப்பினை நாங்கள் ஒரும் பொழுதும் செய்யப்போவதில்லை.
எங்களுடைய பேசுக்கள் ஒன்றாகவே இருக்க போகின்றது. இன்றைக்கு பேசுவதும், நாளைக்கு பேசுவதும், அல்லாஹ் நாடினால் அடுத்த மாதம் பேசுவதும் ஒரே பேச்சாகத்தான் எனது அரசியல் வாழ்வில் இருந்து வந்திருக்கின்றது. பொதுவாக ஒரு பொய்யைதானும் அரசியல் மேடைகளில் இறைவன் பேச வைக்க கூடாது என பிரார்த்தித்து விட்டுத்தான் மேடைகளிலே உரையாற்றி இருக்கின்றேன்.
முஸ்லிம் காங்கிரஸ் எனபது எங்களுடைய கட்சியாகவே இருக்கின்றது. ஆனால் ரவூப் ஹக்கீம் தலைவராக இருக்கின்ற வரைக்கும் அந்த கட்சியோடு சமரசம் செய்வதைப்பற்றி சிந்திக்கவே முடியாது. அவரோடு நண்பனாக பேசலாமே தவிர அரசியல் ரீதியாகவோ அல்லது சமூகத்தின் விடுதலை சம்பந்தமாகவோ பேசுவதில் எந்த விதமான அர்த்தமும் இல்லை என தெரிவிக்கின்றார் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ். அவர் தெரிவித்த குறித்த கருத்துக்களின் காணொளி இங்கே நேர்களின் பார்வைக்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
வீடியோ எடுத்த வாந்தியை உண்ண மாட்டேன்:- www.youtube.com/watch?v=gqJn1QurPcA&feature=youtu.be