திருகோணமலை வைத்தியசாலைகளின் அபிவிருத்திக்கு நிதியொதுக்கீடு..!

எம்.ரீ.அம்ரிட் அஹா-
சுகாதாரத்துறையில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள பல வைத்தியசாலைகள் பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கி வருகின்றன நல்லாட்சி அரசாங்கத்தில் அவ்வைத்தியசாலைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்கும் முகமாகவும், அபிவிருத்தியினை ஏற்படுத்தும் முகமாகவும் கிழக்கு மாகாண சபையின் முன்னால் தவிசாளரும்,பிரதி சுகாதார அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.பாயீஸ் இன்று 08 புதன்கிழமை பிரதி அமைச்சரை நேரடியாக சந்தித்து விடுத்த கோரிக்கைக்கு அமைய கிழக்கு மாகாண சபையுடன் இணைந்து பின்வரும் வைத்தியசாலைகளுக்கு 2017ஆம் ஆண்டுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தோப்பூர் பிரதேச வைத்தியசாலை சுற்றுமதில் அமைக்க 7.2 மில்லியனும், மூதூர் தள வைத்தியசாலை நோயாளர் பிரிவு வாட் அமைக்க 10 மில்லியனும், மூதூர் தள வைத்தியசாலை கட்டிட மீள் புனரமைப்புக்கு 1.5 மில்லியனும், குச்சவெளி மாவட்ட வைத்தியசாலை சுற்றுமதில் அமைக்க 10 மில்லியனும், முள்ளிப்பொத்தான 95 கிராமிய வைத்தியசாலைக்கு சுற்று மதிலமைக்க 3.9 மில்லியன் ரூபாவும், சிராஜ் நகர் 97 கிளினிக் சென்ரர் சுற்று மதிலமைக்கவும், தரித்து நிற்பதற்கான மண்டபம் அமைக்க 1.9 மில்லியனும், குச்சவெளி மாவட்ட வைத்தியசாலை நோயாளர் பிரிவினை விஸ்தீரணம் செய்து புணரமைக்க 9.3 மில்லியனும், கிளிவெட்டி கிராமிய வைத்தியசாலைக்கு வைத்தியர் விடுதி மற்றும் நோயாளர் பிரிவினை புணரமைக்க 7.5 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -