எம்.ஜே.எம்.சஜீத்-
அட்டாளைச்சேனை அந்- நூர் மகா வித்தியாலயத்தை அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு பின்னர் அவை வேறு பாடசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதைக் கண்டித்தும், மீண்டும் அவ் அபிவிருத்தி திட்டத்தை அந்-நூர் மகா வித்தியாலத்தில் அமுல்படுத்துமாறு கோரியும் நேற்று திங்கட்கிழமை (06) காலை பெற்றோர்களும், பழைய மாணவர்களும் பாடசாலைக்கு முன்னாள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழைய மாணவர்களும், பெற்றோர்களும் இணைந்து ஏற்பாடு செய்த இவ் கவனயீர்ப்பு போராட்டத்தில் பிரதேச வாதம் காட்டாதே நீதி வேண்டும் அநீதி இளைக்காதே அரசியல் வாதிகளே நியாயம் வழங்கு போன்ற சுலோபங்களை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயம் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு அப்பாடசாலையில் சில அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்த வேலையில் திடீர் என அவைகள் யாவும் இடை நிறுத்தப்பட்டு இத்திட்டம் வேறு பாடசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பின்தங்கிய பிரதேசத்தில் அமைந்துள்ள இப் பாடசாலை கல்வி நிலையில் முன்னேறிக் கொண்டு வருகின்ற வேளையில் வளப்பற்றாக்குறை நீண்ட காலமாக நிலவி வருகின்றது. இதனைக் கருத்திக் கொண்டு அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் திட்டத்தில் உள்வாங்கப்பட்டிருந்த நிலையில் இவை திடீர் என இரத்துச் செய்யப்பட்டுள்ளமை இப் பிரதேச மக்களுக்கும், ஏழை மக்களுக்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனை கண்டித்துடன் இத்திட்டத்தினை இப் பாடசாலையில் அமுல்படுத்துமாறு கோரியுமே இக் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்ததாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்ட ஏனைய பாடசாலைகளில் அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்படும் போதிலும்இ இவ்வித்தியாலயத்தில் மாத்திரம் எந்தவித அபிவிருத்தி வேலையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.
இது தொடர்பில்; அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் தமீம் ஆப்தீன், கிழக்கு மாகாண எதிர்க்கட்சி தலைவர் எம்.எஸ் உதுமாலெப்பை ஆகியோரும் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேலும் ;
அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' எனும் திட்டத்தில் இப்பாடசாலை இணைக்கப்பட்டிருந்த விடயத்தினை கேள்விப்பட்டதும் மிகவும் சந்தோசமடைந்தோம். இப்போது இத்திட்டத்திலிருந்து அந்-நூர் மகா வித்தியாலயம் நீக்கப்பட்டதாக தெரிவித்து மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டம் குறித்து கவலையடைகின்றோம்.
அன்றாடம் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வருமானத்தை ஈட்டிக்கொள்வோரின் பிள்ளைகளே இப்பாடசாலையில் கற்கின்றனர். ஏழை மாணவர்கள் கல்வி கற்கின்ற இப்பாடசாலை அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். குறிப்பாக இன்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்களை கைவிட்டு அதிகாரிகளுடனும்இ கிழக்கு மாகாண கல்வி அமைச்சருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு அதனூடாக தீர்வினை பெற்றுக்கொள்ளுமாறும் உதுமாலெப்பை தெரவித்தார்.
தங்களுக்கு தீர்வின்றோல் தொடர் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கப்போவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்ததையடுத்து கிழக்கு மாகாண கல்வி அமைச்சரை தொலைபேசி ஊடாக தொடர்புகொண்ட கிழக்கு மாகாண எதிர்க்கட்சி தலைவர் உதுமாலெப்பை குறித்த பாடசாலை அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்து முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டம் குறித்து கல்வி அமைச்சரிடம் எடுத்துக் கூறினார்.


