ஹஸ்பர் ஏ ஹலீம் -
இந்த அரசாங்கமானது எமது மக்களின் காணிகளை விடுத்தமை போதுமானது அல்ல வேலைவாய்ப்பு வழங்கவதில் புறக்கனிப்பு மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்ட்டோரின் நிலைமை தொடர்பாக தீர்க்கமான முடிவுகள் வழங்க வில்லை எனவே இன்று எம் மக்கள் பல்வேறு இடங்களில் தமது உரிமைக்காக சாத்விகமாக போராட ஆரம்பித்துள்ளனர் என எதிர்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
நேற்று ( 22) மாலை 4.00 மணிக்கு திருகோணமலை செல்வநாயகபுரம் இந்து மகா வித்தியாலயத்தின் 47 வது வருட பூர்த்தி விழா நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுபாணி மற்றும் மாகாணசபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அவர் தொடர்ந்து உரையாற்றும் போது இன்று எமது பட்டதாரிகள் ஒரு பெரிய போராட்டத்தை நடாத்தி வருகின்றனர்.இது ஒரு நியாயமான போராட்டம் கஸ்டப்பட்டு படித்து பல்கலைக்கழக அனுமதி பெற்று அதன் பின் அதனை நிறைவு செய்து பட்டம் பெற்று வெளி வந்தவர்களுக்கு அரசு தொழில் வாய்பபை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது அரசின் தலையாய கடமையாகும்.
எமது இளைஞர்களைப் பொறுத்தவரை தொழில் வாய்ப்பில் புறக்கனிக்கப்படுவது அன்று முதல் இடம் பெற்று வருகிறது. இது தொடர முடியாது இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
மற்றும் காணிப்பிரச்சினை தொடர்பாக எமது மக்கள் போராடுகின்றனர்.தாம் பல தசாப்தங்களாக வாழ்ந்த தமக்கு சொந்தமான காணிகள் இராணுவ முகாமிற்காக ஆக்கிரமிக்கபட்டுள்ளது.தாம் விவசாயம் செய்த நிலங்களில் இராணுவத்தினர் விவசாயம் செய்து காய்கரிகளையும் பழ வகைகளையும் விளைவித்து சந்தைகளில் கொண்டு வந்து விற்கின்றனர்.ஆனால் பரம்பரை பரம்பரையாக தாம் வாழ்ந்த காணியை இழந்து விட்டு எமது மக்கள் அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.
மக்களிடம் இருந்து கைநழுவிப் போன சில காணிகள் மீண்டும் மக்களுக்கு வழங்கபட்டுள்ளது.அதற்கு நல்ல உதாரணம் திருகோணமலை சம்பூர் காணி 1000 க்காணக்கான ஏக்கர் பல சவால்களக்கு மத்தியில் எமது மக்களிடம் கையளிக்கபட்டது.அது கனிசமான முன்னேற்றம' ஆயினும் போதியளவு அல்ல நாம் திருப்தி கொள்ளக் கூடி அளவு விடுவிக்கப்பட வில்லை வடக்கிலே குறிப்பாக யாழ்ப்பாணத்தில் மாத்திரம் 5250 ஏக்கர் காணிகள் விடுவிக்கபட வேண்டியுள்ளது.
இன்று எமது காணாமல் போனவர்களின் உறவுகள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.தமது உறவுகளை தேடி போராடும் இவர்களுக்கு ஒரு சரியான பதிலை இந்த அரசு வழங்க வேண்டும் அல்வா? மனவேதனைக்குறிய நிலை ஒன்று அவர்களுக்கு ஏற்பட்டிருந்தால் போதிய விசாரனை நடாத்தி அந்த உண்மையை அம்மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் அப்போது தான் அம்மக்கள் சாந்தியடைவார்கள் அவர்களுக்கறிய பரகாரங்கள் வழங்கப்படவேண்டும் இவைதான் இன்று எமது மக்கள் எதிர் நோக்குகின்ற பாரிய பிரச்சினைகாகவுள்ளது.
தற்போது புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்க நாம் அனைவரும் விரும்புகின்றோம் இது உருவாகினால் கல்வித்துறையில் பாரிய அபிவிருத்திகள் ஏற்படும் அதிகாரங்கள் அதிகமாக வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளது என எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.