க.கிஷாந்தன்-
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை லோகி தோட்டம் மிடில்டன் பிரிவின் புதிய வீடமைப்பு திட்ட பகுதியில் குடியிருப்பு ஒன்றில் 07.03.2017 அன்று மதியம் 2.30 மணியளவில் மண்மேடு சரிந்து விழுந்ததில் குடியிருப்பொன்று பகுதியளவில் சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையாக பெய்து வந்த மழையினால் வீட்டின் பின்புறமிருந்த மண்மேடு சரிந்து விழுந்துள்ளமையினாலேயே குறித்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை வீட்டின் பாவணைப் பொருட்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளதுடன் குடியிருப்பும் பகுதியளவில் சேதமைடந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த அனர்த்தத்தில் குடியிருப்பில் வசித்த யாருக்கும் எவ்விதபாதிப்புகளும் இல்லையென்ற போதும் அவர்கள் தற்காலிகமாக உறவினர்களின் வீட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனர்த்தம் தொடர்பில் தோட்ட முகாமையாளருக்கும், கிராம சேவக அதிகாரிக்கும் அறிவித்துள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகள் தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.