தலைமைத்துவம் என்பது நல்ல ஒழுக்க விழுமியங்களோடும் சுய கட்டுப்பாட்டோடும் இருக்க வேண்டும் - ஜவாத்



பி.எம்.எம்.ஏ.காதர்-
லைமைத்துவம் என்பது நல்ல ஒழுக்க விழுமியங்களோடும் சுய கட்டுப்பாட்டோடும் வளைந்து கொடுத்து மற்றவர்களுக்கு ஏணியாக இருக்க வேண்டும்.அப்போதுதான் வீட்டையும் நாட்டையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் எனவே மாணவத் தலைவர்கள் ஒழுக்கம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஏ.றஸாக் தெரிவித்தார். 

மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலய மாணவத் தலைவர்களுக்கும்,வகுப்புத் தலைவர்களுக்கும் சின்னம் சூட்டிய நிகழ்வு திங்கள் கிழமை (13-03-2017)அதிபர் ஏ.குணுக்கத்துல்லா தலைமையில் நடைபெற்றது.இதில் பிரதம அதிதியாக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் :-மாணவத்தலைவர்கள் சக மாணவர்களோ மிகவும் அன்பாகவும் பண்பாகவும் பழக வேண்டும் எந்த மாணவரையும் தண்டனைக்குட்படுத்துவதும் குற்றம் சுமத்துவதும் தவிர்க்கப்பட வேண்டும் பாடசாலைக் காலம் பொன்னான காலமாகும் அக்காலம் ஒரு போதும் மீண்டும் வராது.

தற்பொழுது மாணவர்கள் ஆசான்களை மதித்து நடக்கின்ற தன்மை குறைந்து கொண்டு போகின்றது.ஆசான்களை மதிக்காதவர்கள் ஒரு போதும் நல்ல மாணவர்களாக இருக்க முடியாது.ஆகவே மாணவத் தலைவர்கள் சக மாணவர்களோடு அன்பை,பண்பையும் நல்ல நட்பையும் பேணிக்கொள்வதோடு ஆசான்களை மதித்து நடக்க வேண்டும் என்றார்;.

இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக கல்முனை முஸ்லிம் கோட்டக் கல்விப்பணிப்பாணர் ஏ.எல்.சக்காப்,சிறப்பு அதிதிகளாக கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எல்.எம்.முஸ்தபா,ஆசியா மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட ஆலொசகர் எம்.ஐ.எம்.வலீத் ஆகியோர் கலந்து கொண்டனர்.இங்கு 42 மாணவத் தலைவர்களுக்கு நியமனக்கடிதம் வழங்கி சின்னம் சூட்டப்பட்டது.28 வகுப்புத் தலைவர்களுக்கும் சின்னம் சூட்டப்பட்டது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -