ஹஸ்பர் ஏ ஹலீம்-
கிண்ணியா தளவைத்தியசாலையை சக்திமிக்க சகலவசதிகளுமுடைய தரமான வைத்தியசாலையாக தரமுயர்த்தி தருமாறு கிண்ணியா சூராசபையின் தலைவர் ஏ.எம்.ஹிதாயத்துள்ளா(நளீமி) இன்று(22) காலை கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலில் றிஸாத்தலைமைமிலான அமைச்சர்கள் குழுவிடம் கோரிக்கையடங்கிய மகஜர் ஒன்றை சமர்ப்பித்து உரையாற்றினார்.
திருகோணமலையில் அதிக டெங்குவினால் பாதிக்கப்பட்ட கிண்ணியா பிரதேசமானது பல சுகாதார பின்னடைவுகளையும் நகர சபை பிரதேச சபையின் ஊடாக பல குறைபாடுகளும் காணப்படுகின்றன குறிப்பாக நகர சபையின் ஊழியர்கள் பற்றாக்குறை வாகனங்கள் பற்றாக்குறை அதேபோன்று பிரதேச சபையிலும் இவ்வாறான பற்றாக்குறைகள் காணப்படுகின்றன இத்தனை ஆளனிப்பற்றாக்குறைகளையும் நீக்க விரைவாக வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் ஏனைய நகர சபையுடன் ஒப்பிடுகின்ற போது கிண்ணியா நகரசபை பல்வேறு வளப்பற்றாக்குறைகளையும் கொண்டு காணப்படுகிறது.
திருகோணமலை நகர சபையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் காணப்படுகின்ற போதிலும் கிண்ணியாவில் அறுபதுக்குப் குறைவான ஊழியர்களே காணப்படுகின்றார்கள் இதேபோன்று கிண்ணியா பிரதேச சபை பகுதிக்குட்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவான குறிஞ்சாக்கேணிப் பகுணிக்கு தனியான கட்டிடங்கள் வாகனங்கள் பற்றாக்குறை காணப்படுகின்றமையும் 14 கிராம சேவகர் பிரிவை உள்ளடக்கிய இப்பகுதிக்கு பொது சுகாதார பரிசோதகர்கள் பிரிவுகளும் கிண்ணியா சுகாதார பிரிவு குறிஞ்சாக்கேணி சுகாதார பிரிவுகளுக்கு அதிகரிக்கப்படல் வேண்டும்.
டெங்கு இதற்கு முன்னரும் 2010,2014 ஆண்டுகளில் ஏற்பட்டாலும் கூட அது 2017 ல் பாரிய அனர்த்தமாக மாறியிருக்கிறது. எனவே இத்தனை விடயங்களையும் அமைச்சர்கள் ஏற்று கிண்ணியா தளவைத்தியசாலை நிலவரம் தொடர்பாக ஜனாதிபதி பிரதமர் போன்றோர்களை சந்திப்பதற்கு ஒருவாரகாலத்துக்குள் ஏற்பாடுகளை செய்து தருமாறும் சூரா சபையின் தலைவர் ஹிதாயத்துள்ளா (நளீமி) மேலும் அமைச்சர்கள் மத்தியில் உரையாற்றினார்.
இவ் உயர்மட்டக்கலந்துரையாடலில் அமைச்சர் றிஸாத் பதியுதீன், உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலி, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் உட்பட உள்ளூராட்சி ஆணையாளர் எஸ்.சுதாகரன் முப்படை அதிகாரிகள் உயரதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.