தொழிலாளர் தேசிய சங்கத்தின் சர்வதேச மகளிர்தின நிகழ்வு இன்று நுவரெலியா பரிசுத்த திரித்துவக் கல்லூரி சௌமிய கலையரங்கத்தில் இடம் பெற்றது. மகளிர் அணித் தலைவியும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான சரஸ்வதி சிவகுரு தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பி. திகாம்பரம், பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் சோ. ஸ்ரீதரன், சிங். பொன்னையா உட்பட பலர் கலந்து கொண்டார்கள். அதில் இடம்பெற்ற நிகழ்வுகளை படங்களில் காணலாம்.