ஏ.எஸ்.எம்.தாணீஸ்-
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவு மீட்டுத்தருமாறு கோரி மூதூரில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மேற் கொள்ளப்படும் உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாகவும் இன்று 7 பாரதிபுரம் சிவன் கோயிலுக்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது உணவு தவிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டோர் கருத்து தெரிவிக்கும் போது தமது போராட்டத்திற்கு அரசியல் வாதிகளும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும் சரியான முடிவினை தராத பட்சத்தில் தாம் மட்டக்களப்பு திருகோணமலை மறித்து போராட்டம் நடாத்தி அவ்விடத்திலையே மாய்வோம் என தெரிவித்தனர்.
அதே வேலை தாம் இரண்டாவது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற போதும் தாங்கள் வாக்களித்த அரசியல் வாதிகள் எவரும் வந்து தமது பிரச்சினைகளை கேட்டறியவில்லையெனவும் அவர்கள் குற்றம் சுமத்தினர்.