மு.இராமச்சந்திரன்-
அட்டன் பொகவந்தலா பிரதான வீதியின் நோர்வூட் பகுதியில் முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
24.02.2017 காலை 7.30 மணியவில் நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட அயரபி தமிழ் வித்தியாலயத்திற்கருகிலே பாதையை விட்டு விலகி நீர்வடிகானுக்குள் வீழ்ந்து விபத்து சம்பவித்துள்ளது
கம்பளை பகுதியிலிருந்து பொகவந்தலா நோக்கி சென்ற முச்முச்சரவண்டியானது அதிகவேகம் காரணமாகவே சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் முச்சக்கரவண்டியின் சாரதி உற்பட முச்சக்கரவண்டி யில் பயனித்த மேலுமொருவரும் படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொள்கின்றனர்