சிப்லி பாறுக்கின் முயற்சியில் ஹிஸ்புல்லா மைதானம் திறப்பு..!

விளையாட்டுத் துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களினால் ரூபா 2,000,000.00 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மீழ்புனரமைப்பு செய்யப்பட்ட காத்தான்குடி ஹிஸ்புல்லா மைதானம் மக்களின், விளையாட்டு வீரா்களின் பாவனைக்காக உத்தியோக பூர்வமாக கையளிக்கும் நிகழ்வு (26.02.2017 ஞாயிறு மாலை) காத்தான்குடி நகரசபையின் செயலாளர் SMM.ஸபி தலைமையில் இடம் பெற்றது. நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுாக் கலந்து கொண்டார்.

கடந்த ஜனாபதி தேர்தலின் போது மேற்படி மைதானம் மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தப்பட்டதன் விளைவாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தமையினால் விளையாட்டு வீரா்களுக்கு பொது மைதானம் ஒன்று இல்லாமையினால் விளையாட்டுக் கழகங்கள், வீரா்கள் பாரிய அசௌகரியங்களை எதிர் கொண்டு வந்ததினை யாவரும் அறிந்த விடயமாகும்.

கழக வீரா்களின் தேவையினை அறிந்த கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுாக் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்,எச்.முஸம்மில் காத்தான்குடி நகர சபையின் முன்னால் செயலாளர் உட்பட பல அதிகாரிகள் அடங்கிய குழுவினருடன் கடந்த ஆண்டு கள விஜயம் ஒன்றினை மேற் கொண்டு மேற்படி மைதானத்தினை மீழ் புனரமைப்பு செய்வதற்கான ஏற்பாடுகளை மேற் கொண்டிருந்தார். 

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுாக் மேற்கொண்ட முயற்சியின் பலனாக அவரால் முன் வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் விளையாட்டுத் துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் 2,000,000.00 நிதி ஒதுக்கீட்டினின் கீழ் மேற்படி மைதானம் இன்று மீழ் புரனமைப்பு செய்யப்பட்டு விளையாட்டு வீரா்களுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேற்படி ஆரம்ப நிகழ்வின் போது கிழக்கு மாகாணத்தின் தலை சிறந்த அணிகளுக்கிடையிலான மின்னொளியிலான உதைபந்தாட்ட கண்காட்சிப் போட்டிகளும், கடினப்பந்து கிரிக்கட் போட்டியும் இடம் பெற்றதுடன் வெற்றி பெற்ற கழகங்களுக்கான நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக அழைக்கப்பட்டிருந்த புனர்வாழ்வு,புணரமைப்பு,மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் MLAM. ஹிஸ்புல்லாஹ் மைதானம் மீழ்புனரமைப்பு செய்யப்பட்டு பாவனைக்காக கையளிக்கும் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்ளாத போதும் கால்பந்தாட்ட நிகழ்வினை பார்வையிட வருகை தந்ததுடன் வெற்றி பெற்ற கழகங்களுக்கான நினைவுச் சின்னங்கள் இராஜாங்க அமைச்சர் MLAM. ஹிஸ்புல்லாஹ் மற்றும் பொறியியலாளர் சிப்லி பாறுாக் ஆகியோரினால் வழங்கி வைக்கப்பட்டன.

மிக நீண்ட நாட்களுக்குப் பின் இடம் பெற்ற மின்னொளியிலான கால்பந்தாட்டத்தினை பார்வையிட பல ஆயிரக்கணக்காக பார்வையாளர்கள் மைதானத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். ஏ.எல்.பைரூஷ்-







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -