ஹாசிப் யாஸீன், அகமட் எஸ். முகைடீன்-
சாய்ந்தமருது சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிச் சங்கத்தின் புதிய கட்டட திறப்பு விழா நேற்று(27) திங்கட்கிழமை சாய்ந்தமருது நூலக வீதியிலுள்ள சமுர்த்தி கட்டடத் தொகுதியில்இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் சாந்தரூபன் அனுருத்தவின் அழைப்பின் பேரில்சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நீல் பண்டார ஹப்புஹின்னபிரதம அதிதியாக கலந்து கொண்டு மேற்குறித்த கட்டடத்தினை திறந்து வைத்தார்.
சாய்ந்தமருது உதவிப் பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ் தலைமையில் இடம்பெற்றஇந்நிகழ்வில் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்கள குறுநிதிப் பணிப்பாளர் கே.கே.எஸ்.சந்திரதிலக,அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.விமலநாதன், சட்டம், ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், சமுர்த்தி அபிவிருத்தித்திணைக்கள வட கிழக்குப் இணைப்பாளர் ஐ.அலியார், சமுர்த்தி முகாமையாளர்களான எம்.சலீம்,ஏ.சீ.ஏ.நஜீம், எஸ்.றிபாயா, ஏ.ஆர்.எம்.பர்ஹான், எம்.எஸ்.எம்.மனாஸ், ஏ.ஆர்.எம்.சாலிஹ், உதவிமுகாமையாளர்களான எம்.யூ.ஹில்மி, எம்.எம்.எம்.முபாறக், ஏ.எம்.எம்.றியாத் உள்ளிட்டசமுர்த்தி பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கடந்த வருடம் புதுவருட சேமிப்பு வாரத்தில் அதிக சேமிப்புக்களை சேகரித்த களஉத்தியோகத்தர்களும், வங்கி உத்தியோகத்தர்களும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன்உயர்தரம் கற்கும் 22 சமுர்த்தி பயனுகரிகளின் பிள்ளைகளுக்கு சிப்தொற புலமைப்பரிசிலுக்கானகாசோலை வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வில் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நீல் பண்டாரஹப்புஹின்ன் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இதன்போது பணிப்பாளர் நாயகம் நீல் பண்டார ஹப்புஹின்ன குறிப்பிடுகையில்,
இவ்வருடத்தினை நல்லாட்சி அரசாங்கம் வறுமை ஒழிப்பு ஆண்டாக பிரகடனப்படுத்தியுள்ளது.கடந்த அரசினால் சமுர்த்தி திட்டம் திவிநெகும என பெயர் மாற்றப்பட்டிருந்தது. தற்போதையநல்லாட்சி அரசு சமுர்த்தி என பெயர் மாற்றியுள்ளதுடன் பெயர் மாற்றத்தினை அறிமுகம்செய்யும் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வர்ணம் என்பனஅறிமுகம் செய்து வைக்கும் தேசிய நிகழ்வாக நிகழ்வுகள் அமைந்துள்ளன என்றார்.



