அக்கரைப்பற்று கல்வியை பாழாக்கும் வலயக் கல்விப் பணிப்பாளர்..!

க்கரைப்பற்று கல்வி வலயத்தில் சமீப காலமாக மேற்கொண்டு வரும் ஆசிரியர்கள் இடமாற்றம் ஆசிரிய மாற்றீடு விஷயத்தில் அக்கரைப்பற்று கோட்ட கரையோர பாடசாலைகள் தகுதியற்ற திறமையற்ற ஆசிரியர்களைக் கொண்டு குவிக்கின்ற பாடசாலைகளாக மாறி வருகின்றன. இதற்கு அக்கரைப்பற்று வலயக் கல்வி பணிப்பாளரின் முறையற்ற செயற்பாடுகளே காரணமாகும். 

பல்வேறுபட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் வலயக்கல்விப் பணிப்பாளரின் செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. கரையோரப் பாடசாலைகளில் திறமையான ஆசிரியர்களை நியமித்து அக்கரைப்பற்று ஊரின் கல்வி அபிவிருத்திக்கும் சீரான திட்டமிடலுடன் கூடிய மேம்பாட்டுக்கும் அக்கரைப்பற்றின் அனைத்து அதிகார மையங்களும் புத்திஜீவிகளும் உதவ வேண்டும்.

அக்கரைப்பற்று கல்விப்பணிப்பாளரின் இவ்வாறன முறையற்ற அக்கரைப்பற்றுக்குரிய ஆசிரிய வளங்களை தான் நினைக்கின்ற எதேர்ச்சியான முடிவுகளால் மாற்றியமைக்கின்ற போக்குக்கு எதிராக அணைத்து சமுக கட்டடமைப்புகளும் ஒண்றினையுங்கள்.

கல்வி ஆரம்ப தரத்திலிருந்து முறையான திட்டமிடலுடன் மேற் கொள்ளப்பட வேண்டும். ஆனால் இன்று ஆரம்பக் கல்விக்கான திறமையான ஆசிரியர்களை பின்தங்கிய கரையோர பாடசாலைகளுக்கு நியமிக்காமல் தான் விரும்புகின்ற விதத்தில் செயற்படுவதை கண்டிக்கின்றோம். 

இது தொடர்பில் உரிய முயற்சிகளை மேற் கொள்ளவும் உரிய மட்டங்களில் தகுந்த கலந்துரையாடல்களை மேற்கொள்ளவும் அன்புடன் வேண்டி நிற்கிறோம்.

தகவலுக்காக,
கெளரவ அல் ஹாஜ் ஏ.எல்.எம்.அதாஉல்லா,
தேசிய தலைவர் தேசிய காங்கிரஸ்.

கெளரவ எ.எல்.தவம்,
மாகாணசபை உறுப்பினர்.

கெளரவ அ.அகமத் சகி,
முன்னாள் முதல்வர்.

தலைவர்,
அனைத்து பள்ளிவாசல் ,
அக்கரைப்பற்று. 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -