பல்கலைக்கழக மாணவர்களுக்கான மூன்று நாள் வதிவிட புத்தாக்க பயிற்சிநெறி.!

யூ.கே.காலித்தீன்,எம்.வை.அமீர்-
ல்முனை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட மூன்று நாள் வதிவிட புத்தாக்க பயிற்சிநெறி ஐக்கிய அமெரிக்க தூதரகத்தின் பூரண அனுசரணையில் கடந்த 30ம் திகதி தொடக்கம் 01ம் திகதி வரை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஊழியர் அபிவிருத்தி நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது

மேற்படி பயிற்சிநெறியானது அம்பாறை மாவட்டத்தில் இருந்து பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் அனைத்து இன மாணவ மாணவியரையும் உள்ளடக்கியதாக இருந்தது. எதிர்காலத்தில் இதனை இன்னும் விரிவாக முன்னெடுக்கும் வகையில் பூரண உதவியளிக்கும் திட்டமாக செயல்படுத்த இலங்கையின் அமெரிக்க தூதரகம் முன்வந்திருப்பது கல்முனை ஸாஹிரா கல்லூரி வரலாற்றில் இதுவே முதற் தடவையாகும். 

இந்நிகழ்வானது கல்லூரியின் பழைய மாணவ சங்கத்தின் முன்னாள் செயலாளரும் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட விரிவுரையாளருமான அஸ்லாம் சஜாவின் ஒருங்கிணைப்பின் கீழ் பல்துறை சார்ந்த விசேட வளவாளர்களை கொண்டு நடத்தப்பட்டது.

பயிற்சிநெறியின் இறுதி நிகழ்வுக்கு கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம் பிரதம அதிதியாகவும், சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம் சலீம், கல்லூரியின் அதிபர் பீ.எம்.எம்.பதுர்த்தீன், ஐக்கிய அமெரிக்க தூதரகத்தின் பிரதிநிதியாக நௌஸாட் ஏ. ஜப்பார் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் இறுதியில் அதிதிகளாலும் பழைய மாணவ சங்கத்தின் உயர்பீட உறுப்பினர்களாலும் பயிற்சிநெறியில் கலந்துகொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் நினைவுச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சி திட்டமானது கல்முனை ஸாஹிரா மாணவர்களை மாத்திரம் கருத்திற் கொள்ளாது ஏனைய பாடசாலையில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகியுள்ள மாணவர்களுக்கும் இந்நிகழ்ச்சி திட்டம் மூலம் பயன் பெற்றமை விசேட அம்சமாகும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -