அப்துல்சலாம் யாசீம்-
கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தில் முறையான அதிபர் இடமாற்றக் கொள்கை நடைமுறைப் படுத்தப் படாததால் சில அதிபர்கள் பாதிக்கப் பட்டுள்ளதாக ஆளுனரின் கவனத்திற்கு கொண்டு வரப் பட்டுள்ளது. பொதுநல அமைப்புக்கள் சில இந்த முறைப்பாட்டை செய்துள்ளன.
சில அதிபர்கள் அடிக்கடி இடமாற்றப் படும் அதேவேளை சிலர் மிக நீண்ட காலமாக தங்களுக்கு வசதியான பாடசாலைகளில் கடமை புரிய அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் இந்த முறைப்பாட்டில் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது.
கிண்ணியா கல்வி வலயத்தில் ஒரு அதிபர் ஒரே பாடசாலையில் தொடர்ந்து 22 வருடங்கள் கடமை புரிந்து வருகின்ற போதிலும் கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் இந்த விடயத்தை கண்டுகொள்ள வில்லை என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
எனவே முறையான அதிபர் இடமாற்றக் கொள்கை கிழக்கு மாகாணத்தில் அமுல் படுத்தப் படுவதை உறுதிப் படுத்துமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
