தமிழ்நாடு ஜமால் முஹம்மத் கல்லூரி வெளியிடும் நூலில் இலங்கையரின் கட்டுரை..!

திருச்சி சாகுல் ஹமீது-
மிழ் நாடு திருச்சிராப்பள்ளி ஜமால் முஹம்மத் கல்லூரியின் முதுகலை மற்றும் தமிழா#வுத் துறை நடத்தும் இஸ்லாமிய தமிழ் இதழ்களின் பணி என்ற தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கு, நாளை (01) புதன்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

ஜமால் முஹம்மத் கல்லூரி முதல்வர் முனைவர். எஸ். முஹம்மத் ஸாலிஹ தலைமையில், கல்லூரியின் செயலர் அ.கா. நஜிமுதீன் சாஹிப், தலைவர், எம்.ஐ. முஹம்மத் ஹிலால் சாஹிப், பொருளாளர். கே. கலீல் முஹ்மத் சாஹிப், துணைச் செயலர் எம். ஜமால் முஹம்மத் பிலால் சாஹிப் ஆகியோரின் முன்னிலையில் இடம்பெறும் இக்கருத்தரங்கில், இந்திய முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் பேராசிரியர் காதர் முஹைதீன் தொடக்கவுரை நிகழ்த்துவார்.

இரு அரங்குகளாக நடைபெறும் இக்கருத்தரங்கில் இஸ்லாமிய ஊடகங்களின் பணி பற்றி பல்வேறு தலைப்புக்களில் பேராசிரியர்கள், ஊடகவியலாளர்கள் உரையாற்றவுள்ளனர். முஸ்லிம் ஊடகத் துறையின் போக்கு பற்றிய ஆய்வு நூலொன்று இங்கு வெளியிடப்படவுள்ளது. இந்தியா, சிங்கப்பூர் மற்றும் இலங்கையின் பல்கலைக்கழக பேராசிரியர்கள், முன்னணி ஊடகவியலாளர்கள் 18 பேர் எழுதிய கட்டுரைகள் உள்ளடக்கி இந்த நூல் வெளியிடப்படவுள்ளது.

இலங்கையிலுள்ள மணிப்புலவர். மருதூர் ஏ. மஜீத், காப்பியக்கோ ஜின்னா சரிபுத்தீன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் ஆகியோரது கட்டுரைகளும் இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -