மட்டு வாவிக்கரையில் 14 அடி நீளமான முதலை மடக்கிப்பிடிப்பு - படங்கள்

பழுலுல்லாஹ் பர்ஹான்-
ட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் பழைய - கல்முனை பிரதான வீதிக்கு அருகாமையிலுள்ள வாவிக்கரையில் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடமாடிய சுமார் 14 அடி நீளமும் சுமார் 600 கிலோ எடையும் கொண்ட முதலையை 25 இன்று புதன்கிழமை காலை அப்பகுதி மீனவர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.

மேற்படி முதலையை அப்பகுதியிலுள்ள மீனவர் வாடிக்கு அருகாமையிலுள்ள மரம் ஒன்றில் கட்டி வைத்துள்ளதுடன், காத்தான்குடி பொலிசாருக்கும் இது தொடர்பில் அறிவித்துள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

குறித்த முதலையை பார்வையிட காத்தான்குடி, நாவற்குடா, மஞ்சந்தொடுவாய் ஆகிய பிரதேச மக்கள் மஞ்சந்தொடுவாய் வாவிக்கரையை நோக்கி வருகைதந்த வன்னமுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -