11ஆம் திகதி கூடுகிறது முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட­ம்

ஸ்ரீலங்கா முஸ்­லிம் காங்­கி­ரஸின் உயர்பீடக் கூட்டம் எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் 11ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­மை­ய­க­மான தாரு­ஸ்ஸ­லாமில் நடை­பெ­ற­வுள்ள இக்­கூட்­டத்தில் பேராளர் மாநாடு தொடர்­பான விட­யங்கள் உறுதி செய்­யப்­ப­ட­வுள்­ளன. இதன் கார­ணத்தால் மு.காவின் உயர் மட்­டக்­கு­ழுவில் உள்ள அங்­கத்­த­வர்கள் அனை­வ­ரையும் பங்­கேற்­கு­மாறு கட்­டாய அறி­வித்தல் விடுக்­கப்­ப­ட­வுள்­ளது. 

இதே­வேளை சர்ச்­சைக்­கு­ரிய மு.காவின் செய­லாளர் விடயம் தொடர்பில் ஏற்­க­னவே மு.காவின் தலை­மைக்கும், செய­லா­ள­ராக இருக்கும் ஹசன் அலிக்கும் இடையில் இணக்­கப்­பா­டுகள் எட்­டப்­பட்­டுள்ள நிலையில் அந்த இணக்­கப்­பா­டு­க­ளுக்­கான அங்­கீ­கா­ரத்தை மாநாட்டில் கலந்து கொள்ளும் பேரா­ளர்­க­ளி­டத்­தி­லி­ருந்து பெற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது. 

மேலும் எதிர்­வரும் காலங்­களில் உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் மற்றும் மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தல்கள் நடை­பெ­ற­வி­ருப்­பதால் மு.காவினை கிரா­ம­மட்­டத்­தி­லி­ருந்து வலுப்­ப­டுத்­து­வ­தற்­கான செயற்றிட்டங்கள் உட்பட கட்சியின் கட்டமைப்பு சார்பான புதிய தெரிவுகளும் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -