சாய்ந்தமருது வொலிவேரியன் விளையாட்டு மைதானத்தில் புரட்சி - பாராட்டிய ஹரீஸ்

ஹாசிப் யாஸீன், அகமட் எஸ்.முகைடீன்-
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் நிதியொதுக்கீட்டில் சாய்ந்தமருது வொலிவேரியன் விளையாட்டு மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டு விடிவுறும் தருவாயிலுள்ளவிளையாட்டரங்கு மற்றும் மைதான எல்லைக்கான சுவர் போன்ற வேலைத்திட்டங்களை பிரதிஅமைச்சர் ஹரீஸ் நேற்று (30) வெள்ளிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.

இதில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, உதவிப் பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ்,உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜஃபர், பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ.பாவாஉள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பிரதி அமைச்சரின் 7 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் மைதான அபிவிருத்தி வேவைலகள்இடம்பெறுகின்றது.

வேலைத்திட்டங்களின் முன்னேற்றத்தினை பார்வையிட்ட பிரதி அமைச்சர் ஹரீஸ்திருப்தியடைந்ததுடன் குறித்த காலத்தினுள் நிர்மாண வேலைகளை நிறைவு செய்வதற்கு ஒத்துழைப்புவழங்கிய சாய்ந்தமருது பிரதேச செயலாளர், பிரதேச செயலக அதிகாரிகள் உள்ளிட்ட ஒப்பந்தகாரர்களைபிரதி அமைச்சர் பாராட்டினார்.

இவ்விளையாட்டரங்கிற்கான படத்தினை வடிவமைத்து வழங்கிய பொறியியலாளர்ஏ.ஜே.எம்.ஜௌசியினை பிரதி அமைச்சர் இதன்போது நினைவுகூர்ந்தார். புதிய ஆண்டில் இம்மைதான அபிவிருத்திற்கு விளையாட்டுத்துறை அமைச்சினூடாக மேலும் நிதிகளைஒதுக்கீடு செய்யவுள்ளதாக பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -