புட்டம்பையை மீட்க புத்தர் சிலை வைத்து புனித பூமி ஆக்கப்போகிறோம் - அஸ்மி ஏ கபூர்

ல்வேறு பட்ட இன்னல்களுக்கு மத்தியில் காடு வெட்டி கலனி செய்த எமது நிலம் வட்டமடு,பொத்தானை,முறானவட்டி,வேப்பையடி போன்ற பிரதேசங்கள் இன்று புதிதாக தமண பிரதேச செயலக பிரிவில் பல்லாயிரக்கணக்கான காடுகளை வெட்டி எந்த அனுமதியும் இன்றி பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களில் சேனைப் பயிர்ச் செய்கை மேற் கொண்டு வரும் சூழலில் பல ஆண்டுகளுக்கு முன் சந்ததி சந்ததியாக அரச ஆவணங்களுடன் விவசாய செய்கை மேற் கொண்டு வந்த வட்டமடு விவசாயிகள் இன்று ஆரம்பித்த விவசாய நடவடிக்கைகளை தொடர முடியாத வண்ணம் தடைகள் ஏற்படுத்தப் பட்டிருக்கிறது.

அதன் ஒரு அங்கமாகமவே கால்நடை வளர்ப்பாளர்களுக்கு சாதகமாக அன்று வயலில் வைத்து தம்பி காக்காவையும் அவரது நன்பரையும் தமிழ் ஆயுத்குழுக்கள் கொலை செய்தார்கள். அதன் பின் பல்வேறு வழி முறைகளில் எங்களது நிலங்களை விட்டு எம்மை விரட்ட கால்நடை வளர்ப்பாளர்கள் வெவ்வேறு சதி வலைகளை விதைக்கின்றார்கள்.

அதில் ஒரு அங்கமாகவே பொத்தானை பள்ளிவாசலுக்கு முஸ்லீம்கள் சென்று விடாமல் தடுத்த தொல் பொருள் ஆராய்ச்சி நிருவகத்தின் செயற்பாடாகும். மிக மோசமான திட்டமிடலுடன் இந்த சதி இங்கு நிகழ்ந்திருக்கிறது.

1915 ஆண்டின் சிங்கள முஸ்லிம் இனக்கலவரத்தின் பிண்ணனியில் இருந்தவர்கள் யார்? சேர் பொன்னம்பலம் ராமநாதன் போன்றோரின் வகிபாவம் என்ன? என்பது தொடர்பிலும் பேச முடியும்.

இவ்வாறான செயற்பாடுகளால் இணக்க அரசியலை ஏற்படுத்த முடியுமென எதிர்பார்கிறீரா..? புட்டம்பை எனும் எமது முஸ்லீம் கிராமத்தை மீட்க புத்தர் சிலை வைத்து புனித பூமியாக்க நாம் முயற்ச்சித்தால் ஏற்றுக் கொள்வீர்களா? சூழ்ச்சிகளினால் சமுகங்களிடையே ஒற்றுமையையோ ஒருமைப்பாட்டையோ அல்லது நியாயமான அரசியல் தீர்வையோ பெற முடியாது. வெளிப்படை தண்மையில்லாமல் நிகழ்கின்ற ஆட்சி எவ்வாறு நல்லாட்சி யாக இருக்க முடியும்?

சிறிய நிலம் தொடர்பான பிரச்சினையை இனக்கப்பாட்டுக்கு கொண்டு வர முடியாத தலைமைகள் என்ன நம்பிக்கையில் வடக்கு கிழக்கை இணைக்க சொல்கிறார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -