தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் மறைவுக்கு மட்டு மாவட்ட மக்கள் சார்பில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாடாளுமன்றத்தில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார்.
வரவு – செலவு திட்டத்தில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன் போது, “தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதாவின் மறைவின் காரணமாக சோகத்தில் இருக்கும் தமிழக மக்களுக்கும், உலக தமிழ் பேசும் மக்கள் மற்றும் அ.தி.மு.க. தொண்டர்களுக்கு இலங்கை மக்கள் சார்பிலும், மட்டக்களப்பு மக்கள் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்” என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -