வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்கான தற்காலிக நியமனங்கள் வழங்கிவைப்பு...

காரைதீவு நிருபர்-
டக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்கான தற்காலிக நியமனம் வழங்கும் நிகழ்வு கடந்த 24-11-2016 வியாழன் மாலை 3:30 மணியளவில் யாழ்ப்பாணம் குருநகரில் அமைந்துள்ள மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்கள மாநாட்டு மண்டபத்தில் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

குறித்த நிகழ்விற்கு அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் அ.நிக்கோலாஸ்பிள்ளை, அமைச்சின் பிரதம கணக்காளர் திருமதி அனந்தகிரிஷ்ணன், மாகாண வீதி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் டி.சிவராஜலிங்கம், அதிகாரசபையின் கெளரவ உறுப்பினர்கள், இலங்கை போக்குவரத்து சபையின் பிராந்திய முகாமையாளர், தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கங்களின் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் குறித்த நிகழ்வின்போது யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து தலா இரண்டுபேரும் மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் இருந்து தலா ஒருவருமாக மொத்தம் 08 முகாமைத்துவ உதவியாளர்களுக்கும் அத்தோடு யாழ்ப்பாணத்திலிருந்து 14 பேரும் கிளிநொச்சியிலிருந்து 07 பேரும் மன்னார் மற்றும் வவுனியாவிலிருந்து 06 பேரும் முல்லைத்தேவில் இருந்து 02 பேருமாக மொத்தம் 35 நேரக்கணிப்பாளர்களுக்கும் மேற்படி தற்காலிக நியமனங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் அமைச்சர் அவர்கள் உரையாற்றுகையில், போக்குவரத்து சேவையில் காணப்படுகின்ற பல்வேறு பிரச்சினைகளை சீர்செய்வதற்கும், ஒழுங்குபடுத்துவதற்குமான அவசர தேவைகருதி அமைச்சரவை வாரியப்பத்திரம் தாக்கல் செய்ததாகவும், அதற்கமைவாக கெளரவ ஆளுநர் அவர்கள் அனுமதித்ததன்பேரில் மேற்படி நியமனங்கள் வழங்கப்பட்டதாகவும், அத்தோடு அதிகாரசபையை உருவாக்கியவுடன் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் பலவருடங்கள் வேலை செய்தவர்கள் எவ்வித முன்னறிவித்தலுமின்றி நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு நிறுத்தப்பட்டவர்களையும் தனியார் சங்கங்களில் பணிபுரிந்தவர்களையும் அழைத்து நேர்முகத்தேர்வு நடத்தியதாகவும் அவ்வாறு அழைக்கப்பட்ட நூற்றிற்கு மேற்பட்டவர்களில் இருந்து அடிப்படைக் கல்வித்தகைமைகள் உடையவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் மேற்படி தற்காலிக நியமனங்களை பெற்றவர்கள் அதனை வைத்து நிரந்தர நியமனம் கோரா முடியாது எனவும், நிரந்தர ஆளணிகள் உள்வாங்கப்படும்போது அரச நடைமுறைகளுக்கு அமைவாக விண்ணப்பித்து நிரந்தர நியமனத்திற்கு தகுதியுடையவர்களாக வரமுடியுமெனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் தைமாதமளவில் முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் ஆளணிக்கான அனுமதி வழங்குவார்கள் என்றும், அதன்பின்னர் உடனடியாக ஆளணி நிரப்பப்படுமெனவும், குறைந்தது 175 பேருக்கான வேலைவாய்ப்பை வழங்கமுடியுமெனவும் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபை உருவாக்கப்பட்டு ஓர் நியதிச்சட்டத்தினூடாக வேலைவாய்ப்பு வழங்கப்படுகின்றது என்றால் இதுவே முதல்தடவையாகும் என தெரிவித்த அமைச்சர் தனது நியதிச்சட்டத்தை உருவாக்குவதற்கு தன்னோடு ஒத்துழைத்த அனைத்து தரப்பினருக்கும் தனது விசேட நன்றிகளை தெரிவிப்பதாகவும் கூறியிருந்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -