கிழக்கு மாகாண சபைக்கான நிதியில் மேலும் ஒரு தொகுதி நிதியை விடுவிப்பதற்கு மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில் 500 மில்லியன் ரூபா நிதியை கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் விடுத்த கோரிக்கைக்கு இணங்க மத்திய அரசு வழங்கியுள்ளது.
தமது மாகாணத்து வழங்கப்பட வேண்டிய நிதியினை விரைவில் வழங்க ஆவண செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அண்மையில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிழக்கு மாகாணத்துக்கு வழங்கப்பட வேண்டிய நிதியில் ஒரு தொகுதியை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு நிதியமைச்சருக்கு பணிப்புரை விடுத்தார்.
இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்துக்கு 500 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதுடன் மேலும் 600 மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிதியையும் விரைவில் கிழக்கு மாகாணத்துக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
